பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ਕ੍ਰੇ-ਾਂ உலகின் நட்சத்திரம் "தீபம்’ நா.பார்த்தசாரதி) வெளிவருகிற சிறுகதைகள் அனைத்தையும் வாசித்து, ஒரு மதிப்பீட்டுக் கட்டுரை தீபத்தில் வெளியாகும். அப்படிச் சில மாதங்களில் நான் மதிப்பீடு செய்து எழுதிய கட்டுரைகளை நா.பா. வெளியிட்டார். இதே போல் தீபாவளி மலர்களில் வெளியான கதைகள் பற்றியும் நான் விமர்சனக் கட்டுரை எழுதியிருக்கிறேன். スー அஞ்சறைப் பெட்டி, ஆறங்கம் எனச்சில பகுதிகள் தீபம்’ இதழில் உண்டு. இதில் மினி பேட்டி மாதிரி சிலரைச்சந்தித்துப் பேசி, அவர்கள் படத்துடன் இலக்கியச செய்திகளை வெளியிடுவதுண்டு. இப்பகுதிகளுக்காக நான்பலரைச்சந்தித்து பேட்டி எடுத்து எழுதினேன். சினிமாவுக்கு தீபத்தில் இடமில்லை. ஆனால், திரைப்பிரபலங்கள் சிலரின் இலக்கிய உணர்வு பற்றிய செய்திகளை இப்பகுதிகளில் இடம் பெறச் செய்வார் நா.பா. . . . - . . நா.பா.வின் எழுத்தில் மயங்கியவர்களும் உண்டு. அவருடைய தோற்றப் பொலிவில் மயங்கியவர்களும் உண்டு. கம்பீரமான தோற்றம். அவர் நடந்துச் சென்றால், யாரோ நடிகர் மாதிரி இருக்கே... இவர் யாராக இருக்கும்' என்று பலரும் காதுபடவே பேசுவர். இப்படிச் சிலர் என்னை அழைத்தும் விசாரித்ததுண்டு. நிமிர்ந்த நடை, யார்க்கும் அஞ்சாத தோற்றம். இத்தனைக்கும் ஒப்பனைகள் ஏதுமின்றி, எளிய கதராடை களிலேயே அவர் வலம் வருவார். கட்சி மேடைகளாயினும் சரி, இலக்கிய மேடைகளா யினும் சரி, அவர் தங்களோடு வீற்றிருப்பதை அனைவரும் பெருமையாகவே எண்ணினர். . ஜெமினி அதிபர் வாசன் ஒரு முறை நா.பா.வை நீங்கள் என் படங்களில் நடிக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டதாக ஒரு செய்தி நான் கேள்விப் பட்டதுண்டு. - நா.பா. ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஒரு இலக்கியச் சுற்றுப்பயணம் சென்று திரும்பிய சமயம், அவருக்கொரு பாராட்டு விழா சென்னை, அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் நடைப் பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எனக்கு நா.பா. வைப் பார்க்கும்பொழுது பொறாமை யாக இருக்கிறது. இவர் மட்டும் நடிக்க வந்திருந்தால் எனக்கு