பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. ੫ਾਂ ) என்று புரட்சிக் கவிஞர்பாரதிதாசன்.அவர்கள் தொழிலாளர் படும் துயரத்தைக் கண்டு அந்த வெம்மையால் ஏற்பட்ட கொப்பளங்கள் தான் நட்சத்திரங்கள் என்ற கவிதை வரிகளை நா.பா. அவர்கள் கையாண்டு, தொழிலாளர்களின் வேதனையை நாவலின் கதாபாத்திரங்களின் துன்பதுயரங்களோடு ஒப்பிட்டு, நயம்பட எழுதியது வியந்து பாராட்டுதற்குரியது. குறிஞ்சிமலர் நாவல் வெளிவந்த கால கட்டத்தில், நண்பர் இரா. தியாகராசன் அவர்களை (சின்னக்குத்தூசி) ஆசிரியராகக் கொண்டு திருவாரூரிலிருந்து வெளி வந்த மாதவி வார இதழில், திரு. தியாகராசன் அவர்கள் குறிஞ்சிமலர் நாவல் பற்றி எழுதிய விமர்சனத்தில் மணிக் கொடி காலத்துக்குப் பிறகு, மணி வண்ணன் அவர்கள் தன் மணிவண்ணக் கொடியை ஏற்றி வைத்துவிட்டார் என்று பாராட்டி எழுதியது மறக்க முடியாதது. 1965-66 ல் சென்னையில் சொல்லின் செல்வர் ஈ.வெ. கி. சம்பத் அவர்களது தமிழ்ச் செய்தி நாளிதழை பொறுப்பேற்று நண்பர் தியாகராசன்.அவர்கள் நடத்திய போது அந்த பத்திரிக்கை அலுவலகத்தில் நானும் பணியாற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தது. மாலை நேரங்களில் நண்பர் தியாகராசன் அவர்கள் ப எழுத்தாள நண்பர்களைச்சந்திக்கச் செல்வார். - - அவர் செல்லும் போது ஒரு நாள் நானும் அவருடன் சென்றேன். குறிஞ்சி மலர் நாவலில் ஒவியர் வரைந்த கதாநாயகன் அரவிந்தனைப் போன்றே கதர்வேட்டி, கதர்ஜிப்பா அணிந்து, கம்பீரமான தோற்றத்தில், ஒரு மாடியின் சிறிய அறையில் அமர்ந்திருந்தவரிடம் நண்பர் இரா.தி. என்னை அறிமுகம் செய்தார். - - பின்னர், நீங்கள் ரசித்துப்படித்த குறிஞ்சிமலர் நாவலை எழுதிய நா.பார்த்தசாரதி அவர்கள்தான் இவர் என்றார். அன்று முதல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தீபம். அலுவலகத்துக்கு இரா.தியுடன் போய் விடுவேன். அரசியல்-சமுதாயம்- இலக்கியம் பற்றி நா.பா. அவர்கள் நண்பர்களுடன் பேசுவார். - - 'பாதகம் செய்வோரைக் கண்டால்.... மோதி மிதித்து விடுபாப்பா என்ற