பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் } –C57) னார் நா.பா. ஆனால் அந்த காலகட்டத்தில் அத்தகைய பெருமை மிக்க இலக்கிய ஏடு எந்த அளவுக்கு எடுபடவேண்டுமோ, அந்த அளவு இல்லாமல் போனது வருந்தத்தக்கது. அது நா.பா. வுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இருப்பினும் நாம் நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற உறுதியான நம்பிக்கை யிலேயே, தனது அனைத்தையும் (நேரம், பணம், உழைப்பு அத்தனையும்) 'தீபத் திற்கே அர்ப்பணித்தார் நா.பா. . கடுமையான சர்க்கரை வியாதி (Diabetes) இருந்தாலும் மிகக்கட்டுப்பாட்டுடனேயே இருந்தார். இருப்பினும் காலன் அவரை இளம்வயதிலேயே எடுத்துச் சென்றான். 'தீபம்" பத்திரிகை பற்றியதன் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் இருந்த ஏக்கமே நா.பா.வை நலியச்செய்தது என்றுதான் எண்ணுகிறேன். 'இன்று திரும்பிப் பார்த்தாலும் நா.பாவுடைய உன்னதத் தோற்றம் கண்முன்பே நிற்கிறது. நண்பர் பாலகிருஷ்ணன் வெளிப்படுத்தி இருக்கும் 'தீபம்யுகம் படிக்கும்போது பெருமையும், வருத்தமும் கலந்தே வருகிறது. இத்தனை மாண்புமிக்க பெருமைமிக்க படைப்பாளி யுடன் இத்துணைக ாலம் நண்பராக இருந்து முடிந்த அளவு உதவி செய்தோம் என்ற பெருமை.நா.பாவுடைய ஆயுட்காலத்திலும், இப்பொழுதும், தமிழுக்கு அவர் செய்த சேவையை இந்த தமிழகம் உரிய அளவிற்கு நினைத்துக் கூட பார்க்கவில்லையே, என்ற வருத்தமும் மிகவாகிறது. நஷ்டம் தமிழுக்குத்தான், நா.பா.வுக்கு அல்ல.