பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - - - Că3D பிடிக்கிறார்கள், புத்தி மலிவான விலைக்கு எப்போதும் கிடைக்கிறது அவர்களுக்கு என்னைப் பற்றிச் சொல்லுமுன் இந்தியப்பத்திரிகைத் தொழிலுக்கும் உலகப் பத்திரிகைத் தொழி லுக்குமுள்ள முக்கிய வேறுபாடொன்றைக்காணலாம். வளர்ச்சி யடைந்த நாடுகளில் பத்திரிகையாளன் என்பவன் புத்தியும் சுறு சுறுப்பும் உள்ள கூட்டத்திலிருந்து அல்லது வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்துடன் அணுகத் தெரிந்த முற்போக்குச் சிந்தனை யாளர்களின் வட்டத்திலிருந்து உருவாவதைக் கண்டும் கேட்டு மிருக்கிறோம். ஆனால் நியூஸ் பிரிண்ட் காகிதத்தையும் ரூபாய் நோட்டுக்களையும் ஒரே உயரத்துக்கு அடுக்கி வைத்துக் கொண்டு மனோதர்மமில்லாத காகித ஆலையைப் போல் பத்திரிகை நடத்தும் இந்தியப் பத்திரிகை முதலாளிகளில் பலர்தங்கள் மகன், மருமகன், மைத்துனன், மாப்பிள்ளை ஆகியோருக்குப் பெரிய சம்பளத்தில் உத்தியோகம் கொடுத்துஉடன் வைத்துக்கொண்டு, வருமான வரிப் பொய்க்கணக்கில் ஒத்துழைப்பும், உதவியும் கிடைக்கக் கூடிய வகையில் பத்திரிகைத் தொழில் என்னும் காமதேனுவைக் கறந்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக் கிறார்கள். பத்திரிகை நடத்துகிறவனிடமே புத்தி சம்பந்தமான பிரச்சினைகளில் முரண்பட்டு நின்று எதிர்க் குரல் கொடுக்கக் கூடிய இலட்சியக் வாதிகளும் பத்திரிகைத் தொழிலுக்கு வேண்டும் என்று மக்களும் நினைக்கிறார்கள். முதலாளிகளுக்கும் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒப்புக் கொள்கிறார்கள். இந்தக் காரணத்தால் மனிதாபிமானம் என்ற உயர்வான-பெருமிதமான -இலட்சியத்தை முன் வைத்து நடத்தப்படுகிற பத்திரிகைத் தொழிலே அந்த நிலை நிலவுகிற நாடுகளில் பத்திரிகையாளன் மனிததர்மத்தின்-இரட்சகனாக-வானம்பாடிபோல் சுதந்திரமாக இருக்க முடிகிறது. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகுதான் இந்த நிலை வந்திருக்கிறது. பத்திரிகையாளர்கள்-கன்ஸ்வர்வேடிவ் முதலாளி களுக்குப் பயந்து - தயங்கி - முதல் முதலாக இங்கிலாந்தில் - யூனியன் ஒன்று அமைக்கப்பூர்வாங்கக் கூட்டம் நடத்தத் திட்ட மிட்டபோது, கூட்டம் நடத்துவதற்குத் தனியான அந்தரங்க மான இடமே அகப்படாமல் ஒரு பாழடைந்த கல்லறையிலேஇரகசியமாக நடத்த வேண்டியிருந்ததாம். - நம் நாட்டில் நம் ஊரில்-உள்ள நிலையோ-கல்லறையில் ஒடிப் போய்க்கூட இந்த மாதிரி ஒற்றும்ை பத்திரிகையாளன்