பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54
எழு பெரு வள்ளல்கள்

காணும் வகையில் ஓர் உயர்ந்த கட்டிடம் இருந்தது. அதற்கு ஊர் காண் ஏணி என்று பெயர். அந்த ஏணியிருந்த தெருவுக்கு ஏணிச் சேரி என்ற பெயர் அமைந்தது. அவ்விடத்தில் இருந்தமையால் அப்புலவரை ஏணிச் சேரி முடமோசியார் என்று ஆடையாளத்தோடு சொன்னார்கள். அவர் முடவர்; அதையும் அந்தப் பெயர் குறிப்பித்தது. முடவராக இருந்தாலும் தமிழ்ப் புலமையில் அவர் நிரம்பியிருந்தார். அவருடைய உறுப்புக் குறைவு காரணமாக யாரும் அவரை அவமதிப்பதில்லை. அக்காலத்தில் தமிழ் மக்கள் யாரையும் உறுப்புக் குறைவுக்காக இழிவு படுத்திச் சொல்வது இல்லை. இயற்கையாக அமைந்த குறையைக் குறையாகவே கருதுவது இல்லை. குணத்தினால் குறைவிருந்தால் அதைத்தான் இழிவாக எண்ணுவார்கள். உறுப்புக் குறை உள்ள புலவர்களை அந்த அடையாளத்தோடு பெயர் வைத்து வழங்கியதனாலே, இந்த இயல்பு தெரிகிறது. இழிவாகக் கருதினால் அப்படி வழங்குவார்களா?

ஏணிச்சேரி முடமோசியார் ஆய்குடிக்கு ஒருமுறை சென்றிருந்தார். ஆய் அவரிடம் பேரன்பு பாராட்டினான்; அவருடைய அறிவுச் சிறப்பையும் கவிபாடும் ஆற்றலையும் அறிந்து வியந்தான்; மகிழ்ந்தான். இருவரிடையேயும் நெருங்கிய கேண்மை உண்டாயிற்று. மோசியார் அங்கே தங்கினார். இன்றியமையாத காலங்களில் உறையூருக்கு வருவார்; சில நாட்கள் இருந்து மறுபடியும் ஆய்குடிக்குச் செல்வார். வண்டு மலரில் புகுந்துவிட்டால் இன்னிசை எழுப்பிக்கொண்டே இருக்கும். அப்படியே வள்ளலை அணுகி வாழ்ந்த மோசியாரிடம் பாடல்கள் பல