உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

7 குடிசைக்குள் போதுமான வெளிச்சம் வர வசதி இல்- லாதிருந்தது. வசதியற்ற அச்சிறு குடிசையிலேதான் உலகம் இன்றும் புகழ்கின்ற பெருமை வாய்ந்த ஏப்ரஹாம் லிங்கன் கி.பி.1809-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் பிறந்தார். அவர் குழந்தைப் பருவங் கடந்து ஐந்து வயதுடைய சிறுவரான போது, அவர் தாயார் அவ- ருக்கும் அவருடைய தமக்கைக்கும் கல்வி கற்பிக்கத் தொடங்கினார். அவர்கள் இருந்த இடத்தில் பள்ளிக்- கூடம் இல்லாததால், அவ்வம்மையார் தாம் அறிந்த வரையில் தம் பிள்ளைகட்குக் கல்வி புகட்டி வந்தார்; வீரத் தன்மை பொருந்தின கதைகளை அவ்வப்போது கூறி வந்தார். ஒரு முறை அவர்கள் இருந்த இடத்துக்கு அருகில் ஓர் உபாத்தியாயர் வந்து பள்ளிக்கூடம் ஒன்றை ஏற்படுத்தினார். அப்போது அங்கிருந்த சில பிள்ளைகள் அவரிடம் கல்வி கற்க விடப்பட்டார்கள். அப்பிள்ளைகள் அனைவரிலும் ஏப்ரஹாம் லிங்கனே முதல்வராக விளங்கினார். ஏன் எனில், அவர் தாயார் முன்னரே அவருக்குப் போதிய கல்வி கற்பித்திருந்தார். அல்லவா? ஏனைய பிள்ளைகளின் தாய்மார் படித்திலர். மேலும், அவர்கள் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்கவேண்- டும் என்னும் ஆர்வம் இல்லாதவர்களாக இருந்தார்கள். உபாத்தியாயர் இரண்டு மாதங்கட்குப் பின்னர்ப் பள்ளிக்கூடத்தை மூடிவிட்டுப் போய்விட்டார். அத்- துடன் பிள்ளைகள் படிப்பு நின்றுவிட்டது. சில மாதங்-