________________
8 கட்குப் பின்னர் வேறோர் ஆசிரியர் பள்ளிக்கூடம் வைத்தார். அவரும் சில வாரங்களில் சலிப்படைந்து, பள்ளிக்கூடத்தைக் கலைத்துவிட்டுச் சென்றார்.இங்ங- னம் ஏற்பட்ட உருப்படாக் கல்வியால் அங்கிருந்த மாணவர் யாதொரு நன்மையும் பெற்றிலர்; ஓர் ஆசிரி - யரிடம் கற்றவற்றை மற்றோர் ஆசிரியர் வருவதற்குள் மறந்துவிட்டனர். தொடர்ச்சியான கல்வி இல்லாத- தால், அம்மாணவர் போதிய கல்வி அறிவைப் பெற- வில்லை. எனினும், ஏப்ரஹாம் லிங்கன் தம் அன்னை - யாரின் பேருதவியால் பல நூல்களைக்கற்று நுண்ணறி வினைப் பெற்றார். அவர் இரவில், விளக்கு இன்றி, அடுப்பு வெளிச்சத்தில் படித்து வந்தார். தாமஸ் லிங்கன் தாம் இருந்த இடத்தை விட்டுப் புதிய இடத்திற் குடியேற விரும்பினார். அதனால், அவர் தமது குடும்பத்தோடு இண்டியானா (Indiana) என்னும் பிரதேசத்தை அடைந்தார் ; நல்ல இடத்தை நாடி, அங்கொரு குடிசை கட்ட முயன்றார்.ஏப்ர- ஹாம் லிங்கன் சிறுவராக இருந்தும், அம்முயற்சியில் தம் தந்தையாருக்கு உதவி செய்தார் ; மரக் கட்டை- களைக் கோடரியால் பிளந்தார்; குடிசை அமைக்கப் பெரிதும் உதவியாக இருந்தார். அவர் திறந்த வெளி- யில் கோடரி கொண்டு வேலை செய்வதைப் பெரிதும் விரும்பினார். அவர் சிறுவராக இருந்த போதிலும், உயரமாகவும் கம்பீரமாகவும் காணப்பட்டார். அச்சிறு வயதிலேயே அவர் உத்தமக் குணங்கட்கு இருப்- பிடமானவராகக் காணப்பட்டார். அன்னையார் போத- னைப்படி அவர் நடந்து வந்ததால், சுற்றுப் புறத்தில்