உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு நாள் தாமஸ் லிங் கன் தம் பிள்ளைகளிடம் விடைபெற்று வேட்டையாடச் சென்றார். சென்றவர் சில வாரங்களாகியும் வரவில்லை. லிங்கனும் சாராவும் தம் தந்தையாரை நினைந்து வருந்- தினர்; அவருக்கு என்ன நேரிட்டதோ எனப் பயந்- தனர். இவ்வாறு அவர்கள் கலங்கிக்கொண்டு இருந்த போது தாமஸ் லிங்கன் ஒரு புதிய வெள்ளை மாதுடன் குடிசைக்குள் நுழைந்தார். அவர் பிள்ளைகளை நோக்கி, குழந்தைகளே, நான் உங்கட்குப் புதிய தாயார் ஒருவரை அழைத்து வந்திருக்கிறேன். இவரே உங்- கள் புதிய தாயார்," என்று கூறி, தாம் அழைத்து வந்த வெள்ளை மாதைக் காட்டினார். அவள் குழந்தைகளை அன்போடு தழுவி முத்தமிட்டாள். அது முதல் அப்- பிள்ளைகள் அவளைத் தம் தாயாராகவே எண்ணி நடந்து வந்தார்கள். 66 , லிங்கன் கல்வியில் ஊக்கங் கொண்டிருந்ததைக் கவனித்த புதிய தாய், தான் வைத்திருந்த பல நூல்களை அவருக்குக் கொடுத்தாள்; அவரது முன்னேற்றத்தில் பெரிதும் கவனம் செலுத்தினாள். அந்த அம்மை, சாராவையும் லிங்கனையும் தான் பெற்ற குழந்தைகளா- கவே எண்ணிப் பேரன்புடன் வளர்த்து வந்தாள்; இல்லத்தைக் களிப்பு நிறைந்த இடமாக மாற்றினாள். அவளது பேரன்பினால் அப்பிள்ளைகள் தங்கள் தாயார் இறந்த துக்கத்தை மறந்து, மகிழ்ச்சியோடு அவளிடமே கல்வி கற்று வந்தார்கள். லிங்கன் வேட்டையாடத் தெரிந்தவர். எனினும், அவர் வேட்டையாட ஒரு பொழுதும் விரும்பின-