உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

11 தில்லை. எல்லா உயிர்களும் ஆண்டவன் பிள்ளைகள் என்பதை அவர் உள்ளபடி உணர்ந்தவர்; எவ்வுயிரும் வருந்துவதைக் காணச் சகியாதவர்; எவ்வுயிரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்னும் உயர்ந்த கொள்கை உடையவர். அன்பையும் அடக்கத்தையும் அணிகலன்களாகக் கொண்ட லிங்கன், தமது வீட்டிற்கருகில் 1822u ஏற்பட்ட புதிய பள்ளிக்கூடத்திற் சேர்ந்து படித்து வந்தார். அங்கு அவர் மற்றப் பிள்ளைகளைவிட வகுப். பில் முதல்வராக விளங்கினார். எனினும், அப்பள்ளிக்- கூடம் நெடு நாள் நிலைத்து இருக்கவில்லை. உபாத்தி- யாயர் பள்ளிக்கூடத்தை மூடிக்கொண்டு எங்கோ சென்றுவிட்டார். அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டதும் பிள்ளைகள் அங்குப் படித்ததை மறந்துவிட்டார்கள். ஆனால், ஏப்ரஹாம் லிங்கன் தாம் படித்தவற்றை மற வாமல், மேலும் பலவிஷயங்களைத் தெரிந்துகொண்டார். அவர் அக்கிராமப் பள்ளியைக் கல்விக்கு இருப்பிடம் என்று மதித்து அதில் படித்தார். இரண்டு ஆண்டுகட்குப் பின்னர் வேறோர் ஆசிரி- யர் பள்ளிக்கூடம் வைத்தார். வத்தார். ஆனால், அவரும் விரைவில் களைப்புற்றுப் பள்ளிக்கூடத்தை மூடிச் சென்றார். அத்துடன் லிங்கனின் பள்ளிக்கூடக் கல்வி நின்றுவிட்டது. "நான் பள்ளிக்கூடங்களில் பல முறை படித்த காலத்தைக் கணக்கிட்டால், அஃது ஒரு வரு டத்துக்கும் குறைவாகவே இருக்கலாம்," என்று லிங்கனே ஒரு முறை கூறினார். 66