________________
24 ஒருவனை ஒரு காரணமும் இன்றிச் சுடச் சம்மதிக்க வில்லை. அச்சமின்மையே அவருடைய சிறந்த ஆயு- தம். அதனால், அவர் எப்பொழுதும் எதற்கும் அஞ்சினதில்லை. தமக்கு, 'நியாயமன்று, எனத் தோன்றினதைச் செய்ய அவர் வாழ்நாளில் முன்வந்த தில்லை. முதலில் அவரை வெறுக்கும் கொடிய பகை வரும் பிறகு அவரது நியாயமான நடத்தையைக்கண்டு திகைப்படைவர். அவர் தமக்கு நியாயமானது எனத் தோன்றின எதனையும் கூறவோ, செய்- யவோ ஒரு நாளும் தவறினதில்லை. இத்தகைய சிறந்த ஆயுதத்தால் அவர் பிற்காலத்தில் அமெரிக்க- ரின் - ஏன்? உலகத்தாரின் பெருமதிப்புக்கே இலக்- கானார். மேற் கூறப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர் லிங்கன் தம் வீரர்களோடு அவ்விடத்திலேயே பல நாட்கள் தங்கி இருந்தார். வீரர்கள் வேலையின்றி இருக்க விரும்பவில்லை. அதனால், அவர்கள் லிங்கன் உத்தர- வுப்படி தங்கள் தங்கள் வீடு திரும்பினார்கள். லிங்கன் மட்டும் சுதந்திரப் படையில் ஒரு வீரராகச் சேர்ந்து- கொண்டார். வெள்ளையரைத் துன்புறுத்தின செவ்- விந்தியர்கள் சிறையாக்கப்பட்டார்கள். அவர்கள் தலை- வன் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் முன் கொண்டு போகப்பட்டான். அத்துடன் போர் முடிந்தது. லிங்கன் போர் வீரர்கட்கு வேண்டிய உதவிகளைப் புரிந்தாரே அன்றிப் போர் புரியவில்லை. போர் முடிந் ததும் அவர் தம் வீடு திரும்பினார். அவர், தாம் இளைஞர் படைத்தலைவராக இருந்த பொழுது வீரர்-