________________
25 களை அடக்கும் விதத்தையும், அவர்களுக்கு உத்தர- விடும் விதத்தையும், பிறவற்றையும் நன்கறிந்து கொண்டார்.ஆனால்,தாம் ஒரு காலத்தில் அமெரிக்கா- வின் குடியரசுத் தலைவராக வரக் கூடுமென்பதை அவர் அப்பொழுது அறியார். வீடுதிரும்பினதும் லிங்கன் தேர்தல் (Election) வேலையில் ஈடுபட்டார். அவர் சாங்கமன் (Sanga- man) தொகுதியிலிருந்து மாகாணத் தேர்தலுக்கு நின்றார். அத்தொகுதியிலிருந்து நான்கு பேர் தேர்ந் தெடுக்கப்படவேண்டும். ஆனால், அந்நான்கு ஸ்தானங்- களுக்குப் பதின்மூன்றுபேர் அபேட்சகராக நின்றனர். லிங்கன் செவ்விந்தியரை அடக்கச் சென்றிருந்தமை- யால், அவரால் தேர்தலுக்கு அதிகமாக வேலை செய்- யக் கூடவில்லை. எனினும், அவர் தாம் நின்றதற்குரிய காரணங்களைக் கீழ் வருமாறு பிரசுரித்து மக்களுக்- களித்தார். "சகோதரர்களே, உங்கள் சார்பாக நான் சாங்க மன் மாகாணச்சட்டசபையில் இருப்பேனாயின், உங்கள் அனைவர்க்கும் பிரியமான ஒன்றைச் செய்யவே உங்கள் பிரதிநிதி என்னும் முறையில் நான் முயல்வேன். நான் இளைஞன்; அனுபவம் இல்லாதவன்; உங்களில் பலர் என்னை அறிந்திருக்கமாட்டீர். நான் மிகவும் எளிய குடும்பத்திற் பிறந்து, எளிய வாழ்க்கையை நடத்தி வருபவன்.எனக்குப் பணக்கார உறவினரோ, நண்- பரோ இல்லை. என்னை நானே உங்கட்கு அறிமுகப்- படுத்திக்கொள்ள வேண்டும். என்னைத் தேர்ந்தெடுக்கும்