உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 நண்பர்கட்கு, நாட்டுக்கென நான் செய்யும் தொண்டே பதில் உதவியாம் என்பதை வணக்கமாக அறிவித்துக் கொள்கிறேன். இவ்வறிக்கையை விடுத்த பின்னர், லிங்கன் இரண்டொரு கிராமங்களில் சிறிய சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அக்கிராமங்களில் இருந்த மக்கள் லிங்- கனை நன்கறிந்தவர்கள்; அவருடைய நற்குண நல்- லொழுக்கங்களை அறிந்தவர்கள். அவர்கள் அவரையே தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பதென முடிவு செய்தார்கள்; தங்களுக்குத் தெரிந்த புதியவர்களையும் லிங்கனுக்கே ஓட்டுக் கொடுக்க வேண்டுமென்றும் தூண்டினார்கள். க அந்நிலைமையில், அமெரிக்காவில் இரண்டு பெரிய கட்சிகள் இருந்தன. ஒன்று வெகு காலமாக இருந்து வந்த ஜனநாயகக் கட்சி (Democratic Party) என்- பது. மற்றொன்று விக்ஸ் கட்சி(Whigs Party) என் பது. ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆண்ட்ரூ ஜாக்ஸன் என்பவர். விக்ஸ் கட்சித் தலைவர் ஹென்றி க்ளே(Henry clay) என்பவர். லிங்கன் ஹென்றி க்ளேயிடம் மிகுந்த அன்புடையவர். லிங்கன் அப்பெரியாரைக் கண்டதில்லை; எனினும், அவர் கட்டுரைகளைப் படித் ததிலிருந்து அவர்மீது அன்பு கொண்டார் ; நாட்டுக்- கென அவர் செய்தவை நல்லவை என்பதை உணர்ந்து மகிழ்ந்தார். அக்காலத்தில் வடமாகாணங்கள் கைத்தொழில்- களில் பெயர் பெற்று இருந்தன.அவை தம் பொருள்-