________________
31 தம் தேர்தல் நடைபெற்ற உடனே லிங்கன், தொகுதியில் இருந்த மக்கட்குக் கீழ் வருமாறு செய்தி விடுத்தார்: "என் சகோதரர்களே, என்னைத் தேர்ந் தெடுத்தவராயினும், தேர்ந்தெடுக்காதவராயினும் நீங்- கள் அனைவரும் என் தோழர்களே. உங்கள் சார்பாக நான் சட்டசபைக்குச் செல்வதால், உங்கள் நன்மையே எனது நன்மை. உங்கள் லட்சியமே எனது லட்சிய - மாகும். நாட்டு நன்மை ஒன்றுக்கே நான் போராடு- வேன்." ம லிங்கன் மிகப் பரந்த நோக்கம் உடையவர். அவர் நாட்டு நன்மையையே பெரிதெனக் கருதினார். தமது சுய நலத்தையோ, சிலர் நலத்தையோ அவர் பெரிதெனக் கருதவில்லை. இரவும் பகலும் அவர் மந்திரமாக இருந்தது,அமெரிக்கா உலகில் மேனிலையில் இருத்தல் வேண்டும்,' என்பதேயாகும். 1834-ஆம் ஆண்டில் நடந்த இல்லிநாய்ஸ் மாகா- ணச் சட்டசபைத் தேர்தலால், அம்மாகாணம் முழுவ- தும் லிங்கன் பெயர் பரவிற்று. அங்கத்தினர் காலம் முடிவடைந்ததும், அவர் முன்போலக் கிராமத்துக்கு வந்து சட்ட நூல்களைப் படித்துவந்தார். 1836, 1838, 1840 இவ்வாண்டுகளில் அவர் மீண்டும் மீண்டும் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லிங்கன் விக்ஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை நீங்கள் முன்னரே படித்திருக்கின்றீர்கள் அல்லவா? 1936-ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தல்நடை - பெற்றது. அத்தேர்தலுக்கு ஜனநாயக கட்சி