உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 யார் ஒருவரை நிறுத்தினர். லிங்கன் ஜனநாயகக் கட்சி அபேட்சகருக்கு ஓட்டுக் கொடுக்கக் கூடாதென்று பொது மக்களுக்கு அறிவுறுத்திப் பல உருக்கமான பிரசங்கங்கள் செய்தார். அவருடைய சொற்பொழிவு- கள் மக்கள் மனத்தை விட்டு நீங்கவில்லை. முடிவில், ஜனநாயகக் கட்சி அபேட்சகரே தலைவர் ஆனார். எனினும், எப்ரஹாம் லிங்கன் தம் அரிய உருக்கமான பிரசங்கங்களாலும், எடுத்துக் கூறின உண்மையான நியாயங்களாலும் மக்கள் மனத்தைக் கவர்ந்தார். அவர் பெயர் இரண்டொரு மாகாணங்களிற் பிரபலமாயிற்று. அவர் மாகாணச் சட்ட சபையில் அங்கத்தினராக இருந்த போது சாங்கமன் தொகுதியின் பிர திநிதி- களாகத் தம்மோடு சட்ட சபையில் இருந்தவர்களோடு சேர்ந்து, சாங்கமன் ஜில்லாவுக்கு ஸ்பிரிங் பீல்டைத் (Springfield) தலைநகராக்கினார். இம்முயற்சியில் அவர் பெரும்பாடு பட்டார். லிங்கன் நியூசாலெமை விட்டு ஸிப்ரிங்பீல்டுக்குச் சென்று குடியேறினார்: தம் நண்ப- ரான மேஜர் ஸ்டுவர்ட் என்பவரோடு சேர்ந்து வக்கீ லானார். ஏப்ரஹாம் லிங்கன் வக்கீலாகவும் சட்ட சபை அங்கத்தவராகவும் இருக்கையில் அடிமை வர்த்தகத் தைப் பற்றின கேள்விகள் நாடெங்கும் கிளம்பின. ஒரு சாரார், 'அடிமை வர்த்தகம் நியாயமானது, என்று வாதித்தனர். ஒரு சாரார், 'அடிமை வர்த்தகம் நியாய- மற்றது. அதனை உடனே ஒழிக்க வேண்டும், என்று கர்ச்சித்தனர். ஆனால், அடிமை வர்த்தகத்தை ஆதரித்த அமெரிக்கரே அதிகமானவர். இவ்விவாதங்-