இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
90
வலையர் பாட்டு
பாட்டுக்கு வித்தவலை, பட்டாணிதான் ராயவலை,
பட்டுமுண்டா செட்டியாரே? பவழம் உண்டா
பாண்டியரே?
பட்டுவந் திறங்குதடி, பவழம்வந்த கப்பலிலே;
முத்துவந் திறங்குதடி, முன்னேவந்த கப்பலிலே;
கப்பல்குறி மாவிடிக்க ஒப்பேனோடி சுட்டுப்போட்டு.
வலை தோவல்
பொன்னான வாக்குப் போட்டாரே வாக்கு,
இதுவல்ல வாக்கு? இன்னம்ஒரு வாக்கு;
வாக்கிலே தணிந்து வாங்கடா பெரியாரு;
தோவில் தணிந்து தோவும் பெரியாரு;
தோவி எடுத்தேனே, தோளாசைப் பட்டுவலை.