வலையர் பாட்டு
89
தனத்தைத் தொட்டால் உனக்கென்னடி? தையலரே,
குறிசொல்லடி;
மாரைத்தொட்டால் உனக்கென்னடி? மங்கையரே,
குறிசொல்லடி.
மங்கை திரண்டாளாமே, மயிலேரெண்டு நாளையிலே?
சீதை திரண்டாளாமே, சிவன்பிறந்த நாளையிலே?
நாளாகிப் போகுதடி; நடக்கவேணும் தென்மதுரை.
தென்மதுரை போனாலங்கே தேசிகனைக் காணலாமே;
வடமதுரை போனோமானால் வளர்த்தவனைக் காணலாமே;
காணக்காணத் தோணுதோடி பாவியுட
மண்கோட்டைதான்?
பாவிஎன்னைக் கெடுத்தாளாமே; பாழும் பொண்ணைக்
கொடுத்தாளாமே!
சிறுக்கிஎன்னைக் கெடுத்தாளாமே; சிறங்குப்பொண்ணைக்
கொடுத்தாளாமே!
பக்கம் வலிக்குதடி, பாரெலும்பு நோகுதடி;
ஈரல் கருகுதடி; இருவானம்போல் குன்னுதடி;
மனம்போலக் காட்டைவெட்டி மலையாளத் தீவை
வெட்டி
மலைக்குமுலை கல்லாலடி. சிறுக்கிமுலை சில்லாலடி;
சில்லுப்போலக் காதுகுத்திச் சீலைதைக்கச் சோடாகுமோ?
பொங்கத்தச்ச இருதனமாக் கொப்புளமா ஆறவில்லை;
எண்ணமெல்லாம் பொய்யாச்சுதே! யமனாலே
மெய்யாச்சுதே!
மாயனடி, பொட்டனடி, மதிமயங்கி மங்கையரே,
மங்கை கழுத்துத்தாலி, தொங்குதம்மா தங்கத்தாலி;
அங்கேவந்தா, இங்கேவந்தா, தாலிநல்லாப் பறிக்கவந்தா;
பங்கயப்பூச் சீமாட்டிதான் கொன்றையம்பூ வாணாண்டி;
ஓராம் படுகளமாம், ஓலைப்பூ மண்டபமாம்;
ரெண்டாம் படுகளமாம், ரத்தினக்கல் மேடையிலே;
மேடைவிட்டுத் தான்இறங்கி மோசம்பண்ணி வாறாளாமே;
வாராங்கள்ளு வாரவண்டி, வண்ணத்தூரு நாட்டுக்கள்ளு;
பொன்னுதடி வித்தவலை, பொழுதேறிச் சென்னவலை,