வலையர் பாட்டு
மாயமெல்லாம் உன் மாயண்டா;
மகிமையெல்லாம் உன் மகிமை;
மாயன் பெருமாளே,
மனத்தில்வாழும் சொக்க நாதா,
சொக்கருடை வாகனம் சக்கரங்கொண் டாடவேணும்;
ஆடலென்ன, பாடலென்ன, அஞ்சலென்ன, உன்புரவி!
அஞ்சனா தேவிபெத்த அனுமானை ஆர்அடிச்சார்?
ஆரும் அடிக்கவில்லை; அநியாயங்கள் செய்யவில்லை;
சுக்கலா தேவிபெத்த சூரியனை ஆரடிச்சார்?
ஆரும் அடிக்கவில்லை; அநியாயங்கள் செய்யவில்லை;
எவரும் அடிக்கவில்லை; ஏதொருவர் செய்யவில்லை;
செய்தார் மனமறியச் சீரும்பெற்றாள் நெஞ்சறிய
நெஞ்சிலுள்ள அஞ்செழுத்தை நினையாளாம்,
நீலியவள்;
நீலி துணிஞ்சாலே நின்னாப்போல் யார் துணிஞ்சார்?
யாரை நினைப்பேன் அம்மா, அளவற்ற சிந்தையிலே?
✽✽✽
அன்னமடா கொஞ்சுறது, அருங்கிளியாள் வாய்திறந்து;
வாயால் புகைஎழும்ப அழுதுகண்ணால் தண்ணிவரத்
தண்ணித்துறைப் பொண்டுகளா; சம்பானோடி வருகிறது;
பண்ணநாள் மலரெடுக்கப் பகவானைப் பூசைபண்ண,
ரொம்பநாள் மலரெடுக்கச் சூரியனைப் பூசைபண்ண,
மேலாநாளே மேலாநாளே மெல்லியரும் மேலாநாளே;
காலாநாளே காலாநாளே கன்னியரும் காலாநாளே;
கன்னி புளியமரம், கைலாசந்தான் ஆலமரம்;
புன்னை புளியமரம்; பொறவாலே அத்திமரம்,
அத்திஇளந் தோட்டண்டி; ஆலநல்ல பூந்தோட்டண்டி;
முருங்கைஇளந் தோட்டண்டி முள்இல்லாத பூந்தோட்டண்டி;
முள்ளுமுறிஞ்ச வண்டி, முடித்தஅப்பூ வாடாமலே
தாலி நெருங்காமலே தனபாரங்கள் சோராமலே