உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வலையர் பாட்டு

மானாடண்ணநீ ஓட்டறது, மயிலாடண்ணநீ கொஞ்சுறது.
கோஞ்சுறாளாம் தேவடியாள், கோவிலுக்குத்தான்
         போறேனுன்னு;
ஆக்குறாளாம் தேவடியாள், அரமனைக்குத்தான்
         போறேனுன்னு;
அரமனையாம், பொண்டுகளே, அரிசிவிலைதான்
         எப்படியோ?
நூத்துற படியாலேதான் மூணுபடிதான் வாங்கடாநீ;
நம்மளூர்ப் படியாலேதான் நாலுபடி வாங்கடாநீ;
மாங்காய்க்குத்தான் கல்லல்லவா? மார்முலைமேல்
         பட்டகல்லு?
பட்டண்டி கமலக்கண்ணி, பையன்கையை
         வாளாலேதான்;
வாழையடா உன்கூந்தல், வயிரமது பல்காவி;
எழைசாமி நான் உனக்கு.....

✽⁠✽⁠✽


பச்சரிசி மொச்சைக் கொட்டை, பகவானைத்தான்
         வாகையடா;[1]
வாகைபடத் துடிக்குதம்மா, வலையில்பட நோகுதம்மா;
நோவ உரையாமலே, நொந்தகண்ணால் பாராமலே,
சாய உரையாமலே, சாஞ்சகண்ணால் பாராமலே,

சாயப் பழவேர்க்காடு, சக்கரையாம் கூனிமேடு;
கூனிமேட்டுப் பொண்களுக்குக் கூலிகுத்த நேரமில்லை;
காளமேட்டுப் பொண்களுக்குக் கம்புநல்ல தரித்தானடி;
தரியேனடி பொரியமிர்தம்.....


  1. ↑ (பா-ம்) *வாரையடா.