வலையர் பாட்டு
93
✽✽✽
கண்ணாளன் வருவானோடி? கண்ணேநீ ஏனழுதாய்?
கடைக்கண்ணால் தண்ணிவரக் [கலங்கியேநீ ஏனழுதாய்?]
பொண்ணேநீ ஏனழுதாய், புறங்கண்ணாலே தண்ணிவர?
✽✽✽
வடக்கே மலைகளேறி வாழைஇலைதான் கொண்டுவந்தேன்;
தெற்கே மலைகளேறித் தேக்கிலைதான் கொண்டுவந்தேன்;
தேக்கிலைக்குப் போனமகள் திரும்பிவர நான்கண்டேண்டி;
வாழைஇலைக்குப் போனமகள் மீண்டுவர
நான்கண்டேண்டி;
நான்கண்ட கொம்பிலேதான் மயில்கண்டேண்டி
கானலிலே;
கானலிலே ஏண்டிவந்தே? கவுதாரி மாலைப்பொண்ணு?
வெய்யிலிலே ஏண்டிவங்தோ, வெடமறியா
மாலைப்பொண்ணு?
மாலையிலே என்உயிரு மாளவிதிக்[1] காரடாநீ?
பொண்ணாலே என்உயிரு, போகவிதிக் காரடாநீ?
✽✽✽
போகட்டா தாயேஅம்மா? போய்வரட்டா மாதாவேதான்?
சிந்தத் தலைப்பயணம் சீமானாட்டம் போய்வரட்டா?
நாட்டுக்கப்பல் வருகுதோடி? நம்பினவன்[2]
அரசாண்டானே;
நாம்பாதவன் காடாண்டானே,.....
பொறுத்தான் அரசாண்டானே; பொங்கினவன்
காடாண்டானே;
காடைபடும் கண்ணியிலே கட்டிமகள் பட்டாளாமே?
சிட்டுப்படும் கண்ணியிலே செட்டிமகள் பட்டாளடி.