98
படகு தள்ளும் பாட்டு
ஒருபல்லாக் குள்ளே சாப்பாட்டைச் சாப்பிடுறாங்க,
காவலாளி;
நாலொரு மக்களும் சுடுவானைப் புடிச்சு
ஆகாசப்[1]படிப்பானைப் போட்டா கட்டும்;
அப்படி நீரும்மாத்தி மெத்தை அளிச்சிட்டுக்
கூட்டிக்கொண்டு வாடா காவலாளி,
அப்படித் தொட்டி அணைச்சு அப்படி
மெத்தையைக் கொம்பு வணக்கிக் காவலாளி,
காலையில் பத்துமணிக்குக் குரதி கண்டங்கள்
செய்யும்;
பகல்லே ரெண்டு மணிக்குள்ளே பத்தாயிரங் கோலா
வத்தையில் ஏத்திப் போட்டேன்;
அப்படிப் பாயுங்கள் தூக்கிப் போட்டேன்;
நாலு மணிக்குப் பாயுங்கள் போட்டேன்;
அஞ்சு மணிக்கு மலையைக் கெளப்பினேன்
பன்னெண்டு மணிக்குக் கோடி விட்டேன்;
பாயி புடிச்சேன்; சீனிங்க போட்டேன்;
காடிப் பானைச் சோத்தை எடுத்து
நாலொரு மக்களும் தின்னோம்;
அப்படி நாலொரு மக்களும் ஆரு பறிலே
படுத்துக் கொண்டோம்;
பொழுது விடிஞ்சுது; ரெண்டு சிறா
பதினாறு ரூபாய்க்கு வித்தேன்;
எட்டாயிரம் கோலா அறுபது ரூபாய்க்கு வித்தேன்;
அப்படி வித்துப் போட்டுத் தள்ளிட்டுப் பாயுங்கள்
தூக்கிப் போட்டோம்;
அப்படி ஊருக்கு நேரே வந்து பாய்புடிச்சோம்;
- ↑ (பா-ம்.) *ஆயிடும்படி.