படகு தள்ளும் பாட்டு
97
தலைப்பாய்பதி னஞ்சுமுழம் பாய் கடப்பாய்
ஒன்பது முழம் பாய்;
ராத்திரி தூக்கினமரம் காலை ஆறு மணிக்குள்ளே
ஊருபதி தெரியாது போகுதே காவலாளி;
அப்படிக் காலையிலே எட்டு மணிக்குமேல்
பாய்புடிச்சேன், காவலாளி;
அப்பால் மெத்தையைக் காவலாளி யைநெனைச்சுக்
கங்கையில் விட்டேன்;
கங்கையில் நாலொரு மக்களும் மெத்தையை விட்டுக்
கைகட்டி நிக்கிறாங்க, காவலாளி,
அப்படிப் பீலிக்காரன் மேய்ந்துகொண்டு வாராண்டா,
காவலாளி.
அப்படிப் பதினாறாம் நம்பர்நூல் நாற்பது இழைக்கயிறு
அஞ்சுபிரி கம்பி, ஆறாளு முள்ளு,
அப்படி இறயங்கள் குத்திநல்லாப் போட்டேன்;
அப்படிப் பத்திக் கொண்டுவந்து கிட்டவந்து
சுருக்குப்போடப் போறேன்; தடியைஓட்டப் போறேன்;
அடிஅடி அடிச்சுக் கடயமரத்தில் இழுத்துக்கொண்டு
வச்சேன்;
அப்படிக் காவலாளி வத்தை கிழக்கே
திருப்பங்கள் வச்சான்;
அப்படி மாப்புக் காரக் காவலாளி
காத்தவ ராய சாமி
ரெட்டைப் பட்டறை சீக்கிரமாய்க்
கொண்டு சேக்கணும் காவலாளி;
அப்படி நாலொரு மக்களும் கடய வத்தையில்
வந்துநீர் மாத்திப் பல்லக்கை முகத்தைச் சுத்தினா;
அப்படி நாலொரு மக்களும் ரெண்டுபேர் சேர்ந்து.
7