உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

கோலாமரப் பாட்டு

ஓடி வராதவலை, ஓஞ்சு வராதவலை,
ஆடி வராதவலை, அழிந்து வராதவலை,
தாடிக்கா ரன்வலை, தலைப்பாக்கா ரன்வலை,
மோடிக்கா ரன்வலை, மொள்ள வலைஇழு;
காதத்துவலை, கண்டு வலைஇழு;
தூரத்துவலை, துரத்தி வலைஇழு;
பள்ளத்துவலை, பதுங்கி வலைஇழு


(2)


சித்திரைமாசம் கத்திரி கோடைக் காத்து
வைகாசிமாசம் கத்திரி கோடைக் காத்து
முன்ஏழு பின்ஏழு போகட்டும் காவலாளி

✽⁠✽⁠✽


நாலொரு மக்களும் கிழக்கு முகத்தில்போய்க்
         கோள்ளவேனும்;
கட்டுமரப் பட்டறையைப் போட்டு
         மரத்துக்காரன் வீட்டண்டை வரவேணும்,
                காவலாளி,
அப்படி நாலொரு மக்களும் ரெண்டுரூபாய் குடுத்தால்
         வெள்ளைப் பொட்டிக் கள்ளுக்கு மாற்றுக்கள்ளு
                வேணும்:
அப்படிஇருக்கட்டும்; கிழக்கு முகத்தில் வந்து
         பூஜை நடத்தினோம், காவலாளி;
பூஜை நடத்திப்போட்டு அவங்கஅவங்க வீட்டுக்குப்போய்த்
         தலையை முழுகப் போனாங்க, காவலாளி,
அப்படிக் கிழக்குமுகத்தில் வந்துகட்டு மரத்தை
         அணைச்சுக் கொண்டா;
அப்படிக் கட்டுமரத்தைக் கிழக்கு முகத்திலே
         திருப்பி வைக்க வேணும்;
திருப்பிவச்ச வத்தைதான் மிளந்தோடிப் போகுது;
         அப்படி வத்தைதான் மிளந்தோடிப் போச்சே!