பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏற்றப் பாட்டு

1

ஆதி பெரியோனே, ஆண்டவனே, காவல் ;
ஆபத்து வராமல் அடியேனைக் காரும் ;
ரெண்டுடனே வாரீர்; மூணுடனே வாரீர் ;
நாலுடனே வாரீர், அஞ்சுடனே வாரீர்; ,
ஆறுடனே வாரீர், ஏழுடனே வாரீர்;
எட்டுடனே வாரீர்.....

எட்டாத் துலைக்கு வற்றாத கடலோ?
ஓடிவாஎன் கண்ணே, ஒருபதியால் ரெண்டு,
ஒருபதியால் ரெண்டு, ஒருபதியால் மூணு,
ஒருபதியால் நாலு, ஒருபதியால் அஞ்சு,
ஒருபதியால் ஆறு, ஒருபதியால் ஏழு,
ஒருபதியால் எட்டு.....

ஒருவன்தாண்டா அல்லா; உலகமெல்லாம் ஆள்வோன்.
இருள் தன்னை வீச, இருபதியால் ரெண்டு.
இருபதியால் மூணு, இருபதியால் நாலு,
இருபதியால் அஞ்சு, இருபதியால் ஆறு,
இருபதியால் எழு, இருபதியால் எட்டு,

இருந்துபோவும் பொண்ணே, நடந்தகளை தீர;
மூணிலம் பதுவோ? முப்பதியால் ரெண்டு;
முப்பதியால் மூணு முப்பதியால் ரெண்டு:
முப்பதியால் நாலு. முப்பதியால் எட்டு:
மூக்குத்தியும் பொட்டும் மேற்கத்தியார் போல.

நல்ல மழைபெய்ய நாற்பதியால் ரெண்டு;
நாற்பதியால் மூணு... நாற்பதியால் எட்டு,