உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

ஏற்றப் பாட்டு

நாத்துநடு பெண்ணே, கேக்கிறானே உன்னே;
அஞ்சினேண்டா கண்ணே, அம்பதியால் ரெண்டு.
அம்பதியால் மூணு..... அம்பதியால் எட்டு;

ஆத்துவண்டல் ஓடிப் பூத்ததடா நாணல்;
ஆராக்கப் பானே? அறுபதியால் ரெண்டு;
அறுபதியால் மூணு...... அறுபதியால் எட்டு,

அறுபதடிக் கம்பம் ஏறிஆடும் தொம்பன்;
தொம்பன்மகள் ஆட எழிலம் பதுவோ?
எழுபதியால் ரெண்டு......எழுபதியால் எட்டு.

ஏழைவச்சான் வாழை; மகளைவெச்சான் காவல்.
எண்ணங்கள் தழைக்க; எண்பதியால் ரெண்டு;
எண்பதியால் மூணு...... எண்பதியால் எட்டு.
எண்பதியால் எட்டு எண்பதடிக் கம்பம்,
எட்டிப் போகும் பொண்ணே, மட்டில்லாத நாமே
தோளணைய[1] வாரோம்; தொண்ணுாறியால் ரெண்டு, தொண்ணுாறியால் மூணு..... எட்டு,
தோப்படிச்ச மாங்காய் காப்பணமா நூறு;
வந்துதப்பா நூறு, வண்ணத்துலே மேலே;
சென்றுதப்பா நேரம்; செல்வநதியாலே,
இன்னும்ஒரு நூறு இறைக்கவல்ல வேணும்?
தொண்ணுாறியால் ரெண்டு...... தொண்ணுாறியால் எட்டு.

தோகைமலை மேலே தொடர்ந்துவாடி பொண்னே;
எண்ணங்கள் தழைக்க, எண்பதியால் எட்டு,
எண்பதியால் ஏழு...... எண்பதியால் பத்து.

என்னமதியாலே சின்னவயசுப் பொண்ணே,
கன்னிஆச்சே நீயும்; ஏழிலம் பதுவோ?
எழுபதியால் எட்டு..... எழுபதியால் பத்து.

எங்கிருந்து வந்தே, ஏழைமதியாலே?
ஆறும்தண்மை வீச அறுபதியால் எட்டு.
அறுபதியால் ஏழு, அறுபதியால் ரெண்டு.


  1. (பா-ம்.) *தோழனைய.