உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏற்றப் பாட்டு

3

அன்னநடைப் பொண்ணே, அழகுசித்ர மயிலே,
அஞ்சாச்சே யானை; அம்பதியால் எட்டு;
அம்பதியால் ஏழு......அம்பதியால் ரெண்டு.

அம்பாரம்போட்டானே, தென்பழனி நெல்லை.
நாலாச்சே பானை, நாற்பதியால் எட்டு;
நாற்பதியால் ஏழு...... நாற்பதியால் ரெண்டு.

[நல்லதொரு பட்டணம்] நாகப் பட்டணம்
வந்திறங்கும் கப்பல்; கப்பல்சரக்கென்ன?
மஞ்சள் ஒரு தூக்கு, இஞ்சிஒரு தூக்கு,
மூணிலம் பதுவோ? முப்பதியால் எட்டு;
முப்பதியால் ஏழு...... முப்பதியால் ரெண்டு;
முன்னேவார பொண்ணே? என்னஎன்ன சொன்னாள்?
ஈரந்தண்மை[1] வீச இருபதியால் எட்டு;
இருபதியால் ஏழு...... இருபதியால் ரெண்டு.

இருப்புலக்கை த்தூணு, துலுக்கப்பள்ளி வாசல்.
ஓடிமடை மாற ஒருபதியால் எட்டு;
ஒருபதியால் ஏழு..... ஒருபதியால் ரெண்டு;
ஒருவன் தாண்டா அல்லா, உலகமெல்லாம் ஆள்வான்.
எட்டாச்சா பானை? எட்டுடனே வாரோம்.

2


திபெரி யோனே, ஆபத்து வராமே
மூணு வரிமூணு..... எட்டுவரி எட்டு.
எட்டியம்மா தாயே, ஓடிவா தாயே,
ஒருபதியால் ரெண்டு..... ஒருபதியால் எட்டு,

ஓடிமுத்தி தேங்க ஒடைச்சார்புள்ளி பார்க்க;
இருபதியால் ரெண்டு...... இருபதியால் எட்டு.


  1. (பா-ம்.) *தன்மை, ஈருந்தன்மை.