உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

ஏற்றப் பாட்டு



ருளப்பள்ளி வாசல் பவளக்கொடித் தூணு;
மூணுமுப்பது தானா? முப்பதியால் ரெண்டு.
முப்பதியால் மூணு...... முப்பதியால் எட்டு.

மூத்தவனும் அண்ணா, ஏத்தமுறை நானே;
நல்லமழை பெய்ய நாற்பதியால் ரெண்டு;
நாற்பதியால் மூனு...... நாற்பதியால் எட்டு.
நான்கு முதல் ஏழுவரை இப்படியே வரும்.

நாகூரை வேண்டிப் போனஜனம் கோடி;
அஞ்சுஅம்ப தானால் ஐம்பதியால் ரெண்டு;
ஐம்பதியால் மூணு...... ஐம்பதியால் எட்டு.

அம்புகள் பறக்க ஆனைகள்போராட,
ஆனைவந்துலாவ அறுபதியால் ரெண்டு;
அறுபதியால் மூணு... அறுபதியால் எட்டு.
ஆறுவெட்டப் போறேன்; சோறு கட்டித் தாடி;
சோத்துக் கண்ணே, மாத்தச் சொத்தை மாங்காய்க் கொட்டை,
ஏழுஇருப தானால் எழுபதியால் ரெண்டு;
எழுபதியால் மூணு...... எழுபதியால் எட்டு,
நாணுங்கொடி கட்டிப் போகுதடா கப்பல்;
எண்ணிஎண்ப தானால் எண்பதியால் ரெண்டு;
எண்பதியால் ரெண்டு...... எண்பதியால் எட்டு;

தோழனாரே, வாரும்; தொண்ணுா றியால் ரெண்டு;
தொம்பச்சி மகளே, ஒன்புருஷன் எங்கே?
சந்தைக்குப் போனேன்; காயிதமும் வல்லே;
சென்றுபோச்சு நூறு, சேர்ந்தமடை பாய.

3



ழைஒரு பாப்பான் வாழைவச்சான் தோட்டம்;
வாழைவச்ச தோட்டத்துக்கு மகளைவச்சான் காவல்.
ஏத்தக்கார அண்ணா, என்னங்காணும் சண்டை?
சண்டைஒண்னும் இல்லே, சால்உடைஞ்ச சண்டை;