உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

படகு தள்ளும் பாட்டு

அப்படிப் புருஷன் எழுந்து கோப்பையை
        எடுத்துக் கழுவிக்கொண்டு
சோத்துங்க போட்டுங்க தின்னுறான்;
அப்படித் தின்னுப் போட்டுப் போயுங்க படுத்துக்
        கொண்டான்;
அப்படித் தன்னோட பொண்சாதிக் காரி எழுந்து
வெளியில்வந்து — ரெண்டு மணியிருக்கும்.
இன்னம் அந்தப் பயல்ஏன் எழுந்திருக்கலை?
அப்படி வீட்டண்டை போய்ப் பார்த்தாள்;
போய்ப்பார்த்த காலங்களில் சோத்துச் சட்டியைத்
        தெறந்து பார்த்தாள்;
அப்படி எல்லாத்தையும் அவன் தின்னுட்டுக்
        கொஞ்சமாய் வச்சிருக்கான்;
அப்படிப் பொண்சாதிக் காரி
        சோத்துங்களைப் போட்டுக் கொண்டாள்;
அப்படிப் போட்டுக்கொண்டு அடுப்பண்டை வந்து
        தின்னுறாள்;
அப்படி மேலே கையைக் கழுவிவிட்டுப் படுத்துக்
        கொள்ளுறாள்;
அப்படி அப்படி மேலே புருஷன் எழுந்து வந்தான்;
எழுந்துவந்து முகத்தைச் சுத்தி அலம்புகிறான்;
அப்படி மரத்துக்காரன் விட்டண்டை
        பங்குப் பணத்துக்குப் போனான்;
அப்படித் தன்னோடே பொண்டாட்டிக் காரி
        பின்னோடே போனாளே;
பங்கு பன்னிரண்டரை ரூபாய் பார்க்கிறான்;
பக்கத்திலே வேலிக்குப் பின்னே இருந்து
பொண்டாட்டிக் காரி உளவாய் இருந்து கேட்கிறாள்;