உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படகு தள்ளும் பாட்டு

101

அப்படி வெளியில் வரட்டுமென்று தன்னோட
        பொண்சாதிக் காரி திரும்பி ஓடியாந்து போயிட்டாள்;
அப்படிஅப்படி மேலே மரத்துக் காரன்
வீட்டண்டை போய்ப் பத்து ரூபாய் பங்கங்குப்
        பார்த்தான்னு சொல்லு;
அப்படிஅப்படி மேலே ரெண்டு ரூபாய்
அப்படித் தன்னோட பொண்சாதிக் காரி
ஒண்டிப்போய்க் கேட்கப் போனாள்;
அப்படிப் போய்க் கேட்கப் பன்னிரண்டரை ரூபாய்
இன்னு சொல்லிவிட்டான், மரத்துக் காரன்;
அத்தோட ஒண்டிக்காரன் மரத்துக் காரனிடம்போய்
என், பொண்டாட்டியை மரத்துக்கு
இட்டுண்டு போஎன்றான்.