படகு தள்ளும் பாட்டு
103
தானாடித் தள்ளாடித் தாயே, நடந்துவாடி;
நடந்தால் நடைதோணுமோ? நாணயமாய் ஊர்தோணுமோ?
மாண்டவடம் போனாலும் மதுரை வழிதோணுமோ?
மதுரைச்சொக்க நாதன்துணை; வள்ளிமண வாளன்துணை;
வள்ளிக்கெல்லாம் வலதுக்கெல்லாம் வலையில்படும் மீனுக்கெல்லாம்
மீனா மெளந்தவலை, மீனாட்சி யம்மன்வலை,
கடலா மெளந்தவலை, காமாட்சி யம்மன்வலை;
அம்மணி, என்தாயே, ஆதிபரா சக்தியே,
திக்கெல்லாம் கண்படைச்ச தேவிபரஞ் சோதியே,
தேவி கடலோடத் தேசமெல்லாம் கொண்டோட
மாரி கடலோட மாமாங்கம் கொண்டோடக்
கொண்டவளைக் கண்டாலும் குலையை நடுக்குதே;
வளர்த்தவளைக் கண்டாலும் அடிவயிறு நோவுதே;
நோவ உரையாமலே நொந்தகண்ணால் பாராமலே,
சாய உரையாமலே சாஞ்சகண்ணால் பாராமலே,
பாருக்கு ஓடித்தானா பருந்துலப்பை பேத்தெறக்கி
ஏழையென்று பாராமலே எடுத்துதே வாலிபங்க;
வாலிருந்தால் தேடலாமா? வாதுசொன்னா அழிக்கலாமா?
அழுதகண்ணு சிந்தலையா? அவள்போனாளாம் மூலையிலே;
மூலையிலே கள்ளைவச்சு மொந்தைக்கள்ளை வார்ப்பாளோ ?
சாலையிலே கள்ளைவச்சுச் சாத்தமுதை வார்ப்பாளோ?
சாத்தங்காடாம் சடையன்குப்பம் தயவுண்டானால் வரச்சொல்லுங்க.
ஈச்சங்கடையாம் இருண்டசோலை, இருக்குறான்னு வரச்சொல்லுங்க;
இருந்தால் இருக்குமிடம், இருள்போனால் தங்குமிடம்;