உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படகு தள்ளும் பாட்டு

105

ஆணாய்ப் பிறந்ததில்லை; அரைஞாணும் கட்டலையோ?
கட்டிலுண்டு காவலுண்டு–உனக்குக்–கால்புடிக்கத் தாதியுண்டு;
உடுக்கத் துகிலுமுண்டு; செலவழிக்க ரொக்கமுண்டு;
என்னவென்று சொல்லுவனோ? எழுதுவனோ ஓலையிலே?
ஓலை கருகமணி, ஒருகழுத்துச் சங்குமணி
பாலாக் கருகமணி, பசங்களுக்கே சங்குமணி;
சங்கு முழங்கிவரச் சங்கரனார் கோவிலிலே;
கோவிலும் தூரமம்மா; குழந்தைமனம் காதமம்மா;
மாளிகையும் தூரமம்மா; மைந்தன்முகம் காதமம்மா;
காகம் பறவாது; கருங்குருவி நாடாது;
சிட்டுப் பறவாது; செங்குருமான் நாடாது;
நாடுதங்கி வாமகனே, நல்லசேதி சொல்லட்டுமா?
ஊருதங்கி வாமகனே, உத்தசேதி சொல்லட்டுமா?
ஊருக் கதிகாரி உள்ளுரு வெள்ளாளச்சி;
நாட்டுக் கதிகாரி நம்மளுரு வெள்ளாளச்சி;
வெள்ளாளப் பொண்டுகளா, விளையாடும் பார்வதியே!