உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வலைப் பாட்டு—1

[ஏந்த வலை தோவும்போது பாடும் பாட்டு.]

வாடா, வலேசான், வடவண்டை வலை
தென்னண்டைக் கொண்டு கூண்டு பறிச்சுப்
பட்டாளம் கட்டி வாரிப் பொளந்து
வயிற்றிலே போட்டு
வயிறெல்லாம் காயுது; வர்ணமூடி சோருது;
நிலவெல்லாம் போகுது; நீலமுகம் வாடுது;
நீலட்டராண்டி நீர்மாத்திக் கொண்டு,
ஆண்டவரே வாரும்; எஞ்சாமி வாரும்;
எஞ்சாமி வாரும்; என்துரையே வாரும்;
வாரும், வலைவராதா? வடக்கே வலைவராதா?
ஏறுவலை ஏறாதா? என்றன்கலி தீராதா?
வாடப்பாட்டன் கண்ணாளா, வயல்பாட்டன் கண்ணாளா,
கோடப்பாட்டன் கண்ணாளா, கொண்டப்பாட்டன்
         கண்ணாளா,
ஒருகாத்து, ஒருவெள்ளம், ஒத்தவெள்ளம் கண்ணாளா