இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எதிர்ப் பாட்டு
109
பேழை வயிற்றோனே, லேலேலே
பெருச்சாளி வாகனரே, லேலேலே
ஐயா கணபதியே, லேலேலே
ஐங்கரப் புள்ளையாரே, லேலேலே
ஐயாநான் உன்பாதம், லேலேலே
அடியேனுந் தான்சரணம், லேலேலே
சரணம் சரணம்ஐயா, லேலேலே
சாச்சாங்கம் நான்சரணம் லேலேலே
ஆடை கொடிமேலே லேலேலே
ஆபரணம் பொட்டியிலே லேலேலே
சேலை கொடிமேலே லேலேலே
செலவுதனம்[1] பொட்டியிலே லேலேலே
பொட்டிவரும், புலவுவரும் லேலேலே
பொன்னுந்துற தாலிவரும் லேலேலே
தாலி தவறவச்சு லேலேலே
தலைவாரும் சோதிமின்ன லேலேலே,
சோதி மணிவிளக்கு, சொன்னாலும் பொன்விளக்கு, லேலேலே,
வரிசை மணிவிளக்கு, வந்தாலும் பொன்விளக்கு,
❠
பொன்னை அளந்தவண்டி, பொருள் அளந்த புண்ணியண்டி, லேலேலே,
மண்ணை அளந்தவண்டி, மனை அளந்த மாயவண்டி, லேலேலே,
- ↑ (பா-ம்.) *சிலதானம்.