உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

எதிர்ப் பாட்டு

மாயா, வாடா, வேங்கடேசா, மலையளந்த மாயவனே, லேலேலே,
சொக்கருடன் வாதாடிச் சுக்காங்கொண் டாடவேணும், லேலேலே,
பரமருடன் வாதாடிப் பாற்பசுவைக் காவுகொண்ட லேலேலே,
காவு வருகுதுன்னு காடேறிப் பாருமின்னா, லேலேலே,
பாறை மலையாளம், பதினெட்டாம் வங்காளம் லேலேலே,
கொச்சி மலையாளம், கொறவருட வங்காளம் லேலேலே,
வங்காளம் எங்கேயம்மா? வடுகருட சீமைஎங்கே? லேலேலே,
சீமைக் கடுதாசி, சித்திரத்தால் குண்டுமணி லேலேலே,
மதுரைக் கடுதாசி, மாணிக்கத்தால் குண்டுமணி லேலேலே,
குண்டு கெளம்பிவரக் கூட்டப்படை சாய்ந்துவர லேலேலே,
வானம் கவிந்துவர மழைக்கால் புரண்டுவர லேலேலே,
மறக்கா ருருண்டபந்தயம், மன்னவன் தோத்தபந்தயம் லேலேலே,
செடிகா ருருண்டபந்தயம், சீமானார் தோத்தபந்தயம் லேலேலே,
சீமைகண்டேன், செடியைக்கண்டேன் சித்தளப்பன் மேடைகண்டேன் லேலேலே,
நாடுகண்டேன், நகரம் கண்டேன், நல்லகாலம் பெய்யக்கண்டேன் லேலேலே,
நல்லதடா வேடர்களே, நலமாச்சடா என்றனக்கு, லேலேலே,
ஆகட்டுண்டா வேடர்களே, அலட்டாச்சே என்றனக்கு லேலேலே,
எந்தஊரு? எந்தநாடு? எங்கேருந்து இங்கே வந்தாய்? லேலேலே,
ஆர்குடியை நீகெடுக்க ஆண்டிவேச மாகவந்தாய்? லேலேலே,
ஆண்டி மவனேவாடா, அக்ராரப் பசுங்கிளியே! லேலேலே,