6
ஏற்றப் பாட்டு
மானழுதாப் போலே;—அடிஉன்னை—மாமன் அடிச்சானோ?
மாமனடிக் கல்லை; ஒரு மனிதா தீண்ட வில்லை;
(அடியே) புருசன் அடிச்சானோ, ஒரு பெரப்பங்கழியாலே?
புருசன் அடிக் கல்லே—ஒரு—பூதர் தீண்டவில்லை;
கொழுந்தன் அடிச்சானோ, உன்னைக் கோல்தடியினாலே?
கொழுந்தனடிக் கல்லே; ஒருவரும் தீண்ட வில்லை;
(நான்) வட்டியிலே போட்டசாதம் வாரித்தின்ன மைந்தன் இல்லை;
கிண்ணியிலே போட்டசாதம் (சுவாமி) கீறித் தின்னப் புள்ளேஇல்லை;
நான், தண்ணிக்குப் போகையிலே (சுவாமி) தடம்மறிக்கப் புள்ளே இல்லை;
ஊருக்குப் போகையிலே (சுவாமி) உடன்வரப் புள்ளேயில்லை;
இந்த, அங்காடிக் கூடையை அழைச்சுவர மைந்தனில்லை;
வெங்காயக் கூடையை (சுவாமி) விலைமதிக்க மைந்தன் இல்லை;
இந்த, மழைபெய்த வாசலிலே மைந்தனடி காணேனே!
மைந்தனடி காணாமே—நான்—மறுகி அழுகிறேனே!
5
எட்டிப்பறி பூவை, விட்டுவிடு அரும்பை;
தாவிப்பறி பூவை, தள்ளிவிடு அரும்பை;
ஓடிப்பறி பூவை, ஒதுக்கிவிடு அரும்பை;
தள்ளிவிட்ட அரும்பு தானாய்மல ராதோ?
ஒதுக்கிவிட்ட அரும்பு உடனேமல ராதோ?
பூவைப்பறி யேனோ, புள்ளையார்க்குச்சாத்த?
காயைப்பறி யேனோ, கந்தருக்குச்சாத்த?
மொக்கைப்பறி யேனோ, விக்னருக்குச்சாத்த?
உனத்தொழுதேன் ராமா, ஒருபதியால் ஒண்ணு,
உலகத்தாயி மாரி, சதுரக்கூடைக் காரி,
தாழனூராள் மாரி, தங்கக்கூடைக் காரி,