உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏற்றப் பாட்டு

7

எங்கும்பரா சக்தி, எல்லாம்ஆன ஒத்தி,
எல்லாம்ஆன ஒத்தி [அவள் ஈசுவரி உமையே];
ஆதிபரா சக்தி, அங்காளம்மாள் தேவி,
நெத்திப்பச்சைக் காரி, நெடுங்குண்ணத்து ஆயி,
பொன்னுக்கூடைக் காரி (அவள்) புறப்பட்டாளே மாரி;
தங்கப்பொட்டுக் காரி, (அவள்) தனித்துவந்தாள் மாரி,
ஈசுவரி உமையே, (என்னை) ஈடேறக்கண் பாரும்;
இருபதியால் ஒண்னு.

இடியைப் போலப் பாணம் (அவர்) விடுவார்ரகு ராமர்;
காற்றைப் போலப் பாணப் (அவர்) கணைகளைத் தொடுப்பார்;
மழையைப்போலப் பாணம் (அவர்) வரஅளிப்பார் சுவாமி; பொன்னைப்போலப் பாணம் (அவர்) பூட்டினாரே தேவர்;
ஒருவர்கண் ஒளிவு (ஸ்வாமி) உலகம்பதி னாலும்;
சீதைகண் ஒளிவு அந்தச் சீமைபதி னாலும்;
முருகர்முன் நடக்க, முப்பதியால் ஒண்ணு,
ம்ருகண்டரைப் போலத் தவம்பண்ணினவர் இல்லை;

ம்ருகண்ட ரிஷிக்கு (அவர்) முன்னோர்இட்ட சாபம்;
பிள்ளைஇல்லை என்று பெருந்தவங்கள் செய்தார்;
மைந்தன்இல்லை என்று மாளாத்தவம் செய்தார்;
ம்ருகண்ட ரிஷிக்கு மார்க்கண்டர் பிறந்தார்;
மார்க்கண்ட ரிஷிக்கு வயசுபதி னாறு;
வரமளித்தார் ஸ்வாமி, என்றும்பதி னாறாய்;
ஈரெட்டு வயசாய் ஈசுவரரும் தந்தார்;
மார்க்கண்டனும் அப்போ ஆத்துமணல் சேர்த்து
ஹரனைப்பூஜை செய்து ஈசுவரனைப் பார்த்தான்.
மார்க்கண்டனக் கொல்ல வாரான்எம ராஜன்,
காலதூதர் வந்து கட்டளைப் படியே
கடுங்கோபம் ஆனார்; கடுகடுத்து நின்றார்.
ஈசுவரரும் பார்த்து எமனை உதைத்தார்;
நாராயணா ராமா, காற்பதியால் ஒண்னு.