உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏற்றப் பாட்டு

9

அன்னையாக மலடி அம்மாசைக்கு நடந்தாள்;
சேனநாள் மலடி திருவள்ளூர் நடந்தாள்;
அம்மாவாசை நடந்து அதிகபலன் பெற்றாள்;
அதிகபலன் பெற்றாள்; ஆண்புள்ளையைப் பெற்றாள்;
வேங்கடேசா என்று விளங்கும்தலை வாசல்,
ஆதியிலே னென்று ஆலிக்குமோ செல்வம்?
ஏழைவடி வேலா, ஈடேறக்கண் பாரும்;

ஏதுக்கடி போறே (அந்த) வேழக்காரன் தங்கை?
முத்தல்முறம் கூடை மூணும்கட்டப் போறேன்;
நானும்கூட வாரேன், நாமப்பொட்டி கொள்ள;
ஒக்கத்துணை வாரேன், ஓலைப்பொட்டி கொள்ள;
தங்கிமெள்ளப் போலாம் தாழப்பொட்டி கொள்ள;
பொறுத்துமெள்ளப் போலாம் புஷ்பத் தொட்டி கொள்ள;
புஷ்பங்களைத் தேடிப் பூஜைக்கு வாரேன்;
இருந்துமெள்ளப் போனாள் ஈசன்பொட்டி கொள்ள;
ஈசுவரரும் பார்த்து எங்கே இடம் என்றார்.

பாறையும் சுனையும் பாங்குள்ள நதியும்
தண்ணியும் தடமும் தாமரைப்பூச் செண்டும்;
தாமரைப்பூச் செண்டு தாதியர்க் கழகு;
எங்கள்ஹரி தேவா, எண்பதியால் ஒண்ணு.
எங்கள்புரம் எல்லாம் தங்கமழை பெய்யும்;
வெங்கபுரம் எல்லாம் வெடியநிலாக் காயும்;
தோழிபுரம் எல்லாம் சோதிநிலாக் காயும்;
கன்னிபுரம் எல்லாம் காலமழை பெய்யும்;
மின்னலும் இடியும் வேகமாய்ச் சொரியும்;
கானலும் மழையும் கரக்குமந்த வானம்;
ஊசிபோல மின்னல், உறியைப் போலக் காலு;
மாசிபோல மின்னல் மழையிறங்கப் பெய்யும்;
தொழுதேன்பக வானே, தோராமலைக் காளி,
வாதாடினாள் கூட, தொண்ணூறாலே ஒண்ணு.

சொல்லும்சக தேவா (நான்) வெல்லும்படை போக.
சாஸ்திரப் படியே முன்னே ரதம் போனால்