10
ஏற்றப் பாட்டு
தருமரும் கெலிப்பார்; தரணிபுரம் ஆள்வார்;
பாவிதுரி யோதனன் பண்ணினசூதி னாலே;
பதினெட்டுநாள் சண்டை பாரதம் முடிவு;
துரோபதை கெலித்துக் கூந்தலே முடித்துப்
பந்தயம் கெலித்து (அவள்) பட்டணத்தானே வென்றாள்;
மாயவன் பகவான் மன்னருடை ஒண்ணு.
பிள்ளையாரே வாரீர், நாலுடனே வாரீர்;
நாஅலங் காரி, கோலியனூர் மாரி,
நாயகனை வேண்டி நான்புடிச்சேன் சாலு;
நாவண்டைநா லேற்றம் நாயகிபூந் தோட்டம்
நாவினாலே சொன்னால் பாதகமோ, பொண்னே!
எட்டுடனே வாரீர்; எட்டாத உயரம்;
நட்டாடுறான் கம்பம்; எட்டுத்தண்ட மாலை,
ஒப்புக்கொண்டார் வேலை......
எட்டிஅடிச் சானே, சட்டிக்கயிற் றாலே;
எப்போதும் போல என்னைக் காத்தருள வேணும்;
ஒருபதியால் நாலு, ஒப்பந்தமோ வேலா?
உமக்குப் பழம் தேங்காய், ஒருபுறமாய் வாடா;
திருப்பழனி வேலா, [திருவருளைத் தாராய்.]
ஓங்குவார் அனுமான்; தாண்டுவார் கடலை;
ஒண்டிமரக் தோப்போ? ஒருவனும் பிழைப்போ?
ஒத்திருந்தா ளானால் வச்சிருப்போம் கூட;
ஒட்டடையா சாமை பட்டறைநூ றாமே;
ஒட்டுடைசல் எல்லாம் மாறுவனோ கன்னான்?
ஒட்டனோ சமர்த்தன்; வெட்டினான் குளத்தை;
ஒராங்கல்லு மேலே தாயமாடும் பொண்கள்
ஒருமட்டமாம் பொண்கள் எருமுட்டைக்கும் போறார்
ஒக்கவிளை யாடி வெட்கிப்போனாள் தோழி;
இருபதியால் நாலு.
இருக்கிறாரோ வேலர், கிழக்கு முகமாக?
இருளடைஞ்ச சோலை, சிவன்இருந்த மூலை,
ஈரெழுத்துச் சேலை, பார்வதிக் கோ கூறை,