ஏற்றப் பாட்டு
11
இதுதானோ லங்கை? ஆடிவா குரங்கே,
இருட்டுவழி போனால் வெருட்டும்பனங் காடு;
இது வோசுடு காடு? மலைக்குறவன் வீடு;
இதுவோபெண்ணை யாறு? முழுகும் பொண்ணே, போவோம்;
இண்டைச்செடி தேடித் திரிஞ்சவளே போடி;
இவளாரோ தோழி? பரியாசக் காரி;
இடிகுமரி பெத்த வடிவழகோ பாலன்?
ஈனஜாதி நந்தன் ஸ்வாமிபதம் சேர்ந்தான்;
இருக்கவாடா வந்தே சமைக்கவாடா சாதம்?
இருந்துடாதே பொண்ணே; மறந்துடாதே என்னே;
இருளெப்போ தொலையும்? பொழுதெப்போ மலரும்?
இருளாந்தை கூவும், மழைநாந்த லானால்;
இருசிகலி யாணம், அரிசிகலம் வேணும்;
இருவாட்சி முல்லே பயிராகும் கொல்லே;
இவளைத்தொட்ட தோஷம் எவிடம்போனால் தீரும்?
இந்திரன் பொறக்க இயமநகர் நடுங்க,
முப்பதியால் நாலு.
மூடுமுலைநந்தம் தாயல்லவோ மாதா?
முட்டாளோடா தச்சன், முன்னேவல்லை ஏற்றம்?
மூங்கில்வெட்டிச் சீவி முறங்கள்கட்டும் சாதி;
முந்திரியும் பூக்கும், மந்திரிகள் தோட்டம்;
முன்கொண்டாணி மேலே தங்கொட்டாதே காலை;
முல்லைமல ராதோ? நல்லபனி நேரம்;
மூண்டுதப்பா சண்டை, பாண்டவர்கள் எங்கே?
மூலபலத் தாலே ராமரெதிர்த் தாரே;
முக்காவேரி பாயும், கைக்களவன் தோட்டம்,
முத்தி, உங்கள் அண்ணன் முடிச்சவிழ்த்த கள்ளன்;
மூலையிலே நின்னு சேலைஇல்லை என்றாள்;
முன்பிறந்த பாலன் முலைக்கழுகி றானே?
முன்ஒருநாள் சீதை கண்டகனாப்பொய்யோ?
முன்னேமலட்டாறு பொண்ணைமருட் டாதோ?
முண்டைமக ளாலே கொண்டபொண்ணத் தோத்தான்;