உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏற்றப் பாட்டு

13



ம்பெடுத்தா தம்பி, அவர்சமத்தைப் பார்ப்போம்;
வில்லெடுத்தா தம்பி, வீரியத்தைக் கேட்போம்;
அம்பிருக்கக் கோட்டை அழிஞ்சதென்ன இப்போ?
வில்லிருக்கக் கோட்டை சளைச்சதென்ன இப்போ?
அம்பிருந்தால் என்ன? ஆளப்படை இல்லை;
வில்இருந்தால் என்ன? வீரியங்கள் இல்லை;
அங்கலாய்ப்பாய்ச் சொன்னுல் பொண்பொறந்த தென்ன?
அம்பாரம் மணக்க வந்துதே மரக்கால்;
அழகிட்டதோ பொண்ணே, கிழவனிட்ட மாலை?
வரகா உணர்ந்தால்....
அன்னங்கள் அழுமோ, ஆண்மயிலைத் தேடி?
அன்னமென்றிருந்தேன், அவள் நடந்த சாயல்;
அந்தமில்லாக் கொண்டை ஆர்முடிச்சார் பொண்ணே?
அந்தமும் அழகும் சந்த்ரமதி தானோ?
அந்தமலை ஓரம் கந்தர்வரார் கோலம்;
அண்ணனுக்கு வந்த பொண்எனக்குத் தாயார்;
அண்ணைக்கேநான் சொன்னேன் (அவள்) ஆகாதென்று பங்கு;
அண்ணன்தம்பி வேனும், இன்னும் தம்பி ரானே.
அங்கேஎன்ன கும்பல்? ஆடுறானே தொம்பன்;
அன்னமுண்ட தாலே, ஆண்டிவந்து போனான்;
அம்பலத்தில் விட்டான், அறுபதியால் நாலு.

அன்னக்கொடி ஓங்கும் சின்னத்துரை கப்பல்,
அலையுதவன் கப்பல், அடிக்கனம்போ தாதே!
ஆனக்கலங் காரம், அழகுதிரு நாமம்;
ஆனபோற வீதி (ரகு) ராமர் போறார் சாரி;
ஆத்தாளும் மகளும் வேத்தாளுமாப் போனா;
ஆறுள்ளது மேற்கே; அருங்கடல் கிழக்கே;
அறத்தள்ளி இறைச்சால் ஆறல்லவோ வாய்க்கால்?
ஆத்தைநம்பித் தோழர் அளவாநட்ட ஏத்தம்
அல்லியங் குளமோ? அழகுள்ள நதியோ?
அந்தமும் அழகும் சந்த்ரமதி தானோ?