14
ஏற்றப் பாட்டு
ஆர்பட்ட கடனோ? அடிபட்டாய் மகளே,
தாய்பட்ட கடனோ? தகப்பன்கை எழுத்தோ?
அந்தத்துறை கப்பல் வந்தசரக் கென்ன?
ஆனந்த வருஷம் அடிச்சபெருங் காத்து,
ஆறுகொண்டால் பாயும், வாலிகொண்ட சீமை;
ஆருடனே சொல்லி ஆத்துவேன் குறையை?
ஆனத்துாரான் மக்கள் போனதொரு திக்கு;
ஆனவல்லூ ரம்மா, காணவந்தேன் தாயே,
எழுபதியால் நாலு, ஏழை ரகுராமா,
ஏதோ ஒரு பானம் சீதைகலி யாணம்,
ஏனழுதாள் சீதை? [ஏங்கியழு தாளே!]
லங்கைபோகு மளவும் புலம்பியழு தாளே!
யந்திரத்தைப் பூட்டி வாழ்ந்தகதை சொன்னாள்;
என்குறையைச் சொன்னால் எழுந்தநிலாச் சாயும்;
ஏகாலியோ வண்ணான் மாராயம்பொய் சொன்னன்;
என்னசனி? பாவம்! கையைவிடேன், போவோம்.
ஏதுசுகம் கண்டாள், பாவிமக ளண்டை?
ஏழைப்பொண்ணைக் கொள்ள வாழைப்பந்தல் இட்டான்;
ஏழைக்கேது காலம்? சோதிக்குதே மானம்!
ஏழைவண்ணா னாலே சீதைவனம் போனாள்;
எழுந்திருங்கள் தேவா, விடியற் காலம் ஆச்சே!
எழுப்புடா ரதத்தை, அருச்சுனா புரத்தை;
எழுத்திலே சமர்த்தன், குலத்திலேகம் மாளன்,
எழுதநல்ல புள்ளை, பழுதொருகண் நொள்ளை;
எழுதாத ஓலை சுருளாமோ பொண்ணே?
எழுதிப்படி தம்பி, ஏசப்போறார் ஐயா,
எண்பதியால் காலு.
எருதும்கிழ மானால் உழவுநிலம் போமோ?
பசுவும்கிழ மானால் பால்குணழும் போமோ?
பாம்பும்கிழ மானால் பல்விஷமும் போமோ?
பார்ப்பான்கிழ மானால் பஞ்சாங்கம்பொய் யாமோ?
நானும்கிழ மானால் நாணயமும் போமோ?