உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஏற்றப் பாட்டு

6

பிள்ளையாரே வாரீர், பெருமாளே வாரீர்,
சிவனாரே வாரீர், பெருமாளே வாரீர்,
சிவனும் பெருமாளும் சேர்ந்துரதம் ஏறக்
குருவும் பெருமாளும் கூடிரதம் ஏற
ஹரியும் சிவனாரும் பெரியரதம் ஏற,
நானும் பெருமாளை நடுங்கிப் பணி செய்ய;
ராமரே துணைவா, ராகவரே தண்டம்;
ரக்ஷிப்பதுன் பாரம்; ரெண்டுடனே வாரீர்;
மூன்றுடனே வாரீர், நாலுடனே வாரீர்;
அஞ்சுடனே வாரீர், ஆறுடனே வாரீர்;
ஏழுடனே வாரீர், [எட்டுடனே வாரீர்;]
எட்டடி அளந்து வெட்டினான் துரவே;
பத்தடி அளந்து பாச்சினான் துலாத்தே;
அஞ்சடி அளந்து அமர்த்தினான் மடலே;
எட்டடிக்குக் கோலு எடக்கிநாட்டு மூங்கில்;
பத்தடிக்குக் கோலு பவழக்காட்டு மூங்கில்,
அஞ்சடிக்குச் சோலு அழகிநாட்டு மூங்கில்;
எட்டடியும் கோலும் விட்டாடுமோ பானை?
பத்தடியும் கோலும் பன்னாடுமோ ஏத்தம்?
ஏத்தங்களைப் பார்த்தால் ஏமன்செட லாட்டம்;
உபயநதி வாழ ஒருபதியால் ஒண்ணு,

வமைஸ்தலம் பார்க்கப் பயணம்என்றார் ராமர்;
காசிநதி பார்க்கக் கடினம்பண்ணார் ராமர்;
வையகங்கள் பார்க்க வரதர்போல நின்றார்;
சீமைஸ்தலம் பார்க்கச் சீதைபோறேன் என்றாள்;
அங்குதய ஹனுமார் (அவர்) ஆண்டவன் பெருமாள்,
(அவர்) அழகுடன் பிரயாணம் பங்குஷமா லாலி,
வரதர் போல நின்றர்.....
இனி வருவார் வேலர்; இருபதியால் ஒண்ணு.

னிஅருகர் கோயில் வலம்வருவோம் வாங்க;
பொன்அருகர் கோயில் போய்வருவோம் வாங்க;