உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏற்றப் பாட்டு

17

கோயில்வலம் வந்தால் கோடிபலன் உண்டு;
அருகர்வலம் வந்தால் அதிகசம்பத் துண்டு;
நாதர்வலம் வந்தால் நல்லபலன் உண்டு;
சுவாமிவலம் வந்தால் சற்றும்குறை வில்லை;
அழுகாதடி வாலை அதிகசம்பத் தாகும்;
முப்பதியால் ஒண்ணு

முருகருக்கோ வள்ளி மோகனப்பொண் ஆனாள்;
கந்தருக்கோ வள்ளி கானமயில் ஆனாள்;
வேலருக்கோ வள்ளி வேடிக்கைப்பொண் ஆனாள்;
குமரருக்கோ வள்ளி கொடைவிளக்காய் நின்றாள்;
வேடருக்கோ வள்ளி வேங்கைமரம் ஆனாள்;
குமரருக்கோ வள்ளி கொன்னைமரம்[1] ஆனாள்.
நமோநா ராயணா நாற்பதியால் ஒண்னு.

நாரணப் புரமோ, ஜானகி மடமோ?
ஜானகி மடத்தில் தங்குவார் வரதர்;
கோனேரி மடத்தில் குதிரை கொள்ளுமோ செல்லம்?
(அவர்) தங்குமிடம் எல்லாம் தொங்கும்தண்ட மாலை;
நிற்கும்இடம் எல்லாம் நித்தம்திரு நாளாம்.
நீலவர்ணம் பொய்யோ?...
பொய்யாநதி விட்டுப் போகமன சில்லை;
அன்னமயிலாட அம்பதியால் ஒண்ணு.

அந்திக்கு வரதர் ஆனைமேல் வருவார்;
என்றைக்கும் வரதர் தேர்மேலே வருவார்;
காலமே வரதர் கருடவா கனமோ?
அந்திக்கு வரதர் அன்னவா கனமோ?
நாளைக்கு வரதர் நாகவா கனமோ?
ஹரிஹரிகோ விந்தா, அச்சுதா, அனந்தா,
பச்சைநீல வண்ணா, பாரளந்த மெய்யா,
பாரளந்த மெய்யா, பாண்டவர்ச காயா,
அச்சுதனைப் பாட அறுபதியால் ஒண்னு.


  1. ↑ (பா.ம்.) குறத்தி மகளானாள்.

2