இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏற்றப் பாட்டு
19
பாலம்கையில் ஏந்திப் பாடிவரு வாரோ?
அன்றுரித்த மான்தோல், ஆசனம் புலித்தோல்,
நேற்றுரித்த மான்தோல், நித்தமும் கரித்தோல்,
கன்றுரித்த மான்தோல் கரடிமான் புலித்தோல்;
காவித்துணி வேலும் கையில்புத் தகமும்
கைவிடுவார் வேலர்.
வில்லுண்டையும் அம்பும் விடுவார்அந்த வேலர்;
காற்றடித்த தங்கே; கைகலந்தார் வேலர்;
துாள்பரந்த திங்கே; தோள்அசைந்தார் வேலர்;
தோள்அசைந்த போது தொடரிருந்த பாலன்.
கைகலந்த போது கைநிறைந்த பாரம்.
மாதவாகோ விந்தா, நூறுடனே ஒண்ணு.