உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விராட பர்வ ஏற்றப் பாட்டு

பிள்ளையாரே வாரும்; பிழைவராமல் காரும்;
எனக்குத்தெய்வம் நீரே, உமக்கடிமை நானே;
ராமர்துணை வேணும்; வாரும்பெரு மாளே;
காரும்இந்த வேளை......[கார்கள் திரண்டு]
வந்துமழை பெய்ய வாழும்பயிர் உய்ய,
உள்ளபடி செய்வாய்; ஓடிவந்து மாலே,
ஓர்மடுவில் ஆன ஏங்கியழும் போதே
ஓடிவந்து காத்தாய், ஓதுதிரு மாலே,
பாண்டவர் கதையைப் பாங்குடனே சொல்வேன்;
         ஒருபதியால் ஒண்ணு.
 
உன்னுந்திரி யோனும் மன்னவரும் கூடிப்
பன்னுபாண்ட வர்க்குச் சொன்னதோர் வருடம்
இந்நிலந் தனிலே பண்ணும்அஞ்ஞாத வாசம்
பாண்டவர் தொலைத்து வேண்டிவரு வாரே;
காண்டீபன் முதலோர் [கடிதுவரு வாரே.]
இருபதியால் ஒண்ணு. இருந்ததோர் வனத்தில்
பொருந்திடும் முனியை அறிந்துதிரி யோனும்
வருந்திஅடி பணிந்து, பெருங்தவ முனியே,
பேசும்பாண்ட வர்க்கு மோசமாக யாகம்
முடிக்கவேனும் என்றான்; முப்பதியால் ஒண்ணு.

முதல்வன்திரி யோனும் முதலான முனியும்
இனிமையுடன் வேதம் கனிவுடனே விரிச்சுக்
காட்டிலே புகுந்து கஷ்டங்கள் பொருத்திக்
கனதணலை மூட்டி முனிவர்மங்த்ரம் காட்டி
வனந்தனிலே ஓமம் வளர்த்துகை யாலே,
வந்ததொரு பூதம், அந்தப்புவி மேலே;
நாற்பதியால் ஒண்ணு; நாரணர் அறிந்து
காரண முனிசெய் காரியமாம் யாகம்
தாரணியின் மீது சண்டனை நினைந்து