விராட பர்வ ஏற்றப் பாடடு
21
தான்வரவே செய்தார்; தருமரும் அறிந்து
வருபிரம சாரி ஒருவேடம் எடுத்து
வறுமையுடன் வந்தார்; அம்பதியால் ஒண்ணு.
ஐயரும் கண்டு அழுதுவந்த புள்ளை
அழைத்துமே எடுத்து, அந்தணரே, வாரும்;
சிங்தையில் விசனம் செப்பிடவே வேணும்;
ஒப்பில்மறை யோனே, இப்புவி தனிலே
எனக்கொரு விரதம்; அறுபதியால் ஒண்னு.
அந்தமறை யோனும் ஐயரை வணங்கிச்
செய்யும்உப நயனம் செய்யவேணும் என்று
ஐவரை அடுத்தேன்; அதற்கொரு கலைமான்
அரியதோலைக் கொண்டு [ஆர்வமொடும் அப்போ]
பெருகிடும் வனத்தில் வருகும்வழி தன்னில்
எழுபதியால் ஒண்ணு.
என்கையில் இருந்த இன்பமாகும் தோலே
இவ்வனக் கலைமான் கவ்வியே பறித்துக்
கடுகினில் மறைந்து செடியினில் ஒளித்துச்
சேர்ந்துபோன தென்றான், சிறுவன்பிரம்ம சாரி.
சேதியை அறிந்தார்; எண்பதியால் ஒண்ணு.
என்றமொழி கேட்டு எடுத்தபாணம் வில்லும்
எழுந்தைவர் தாமும் ஏகுமான் வழியே
போகும்வழி தேடிப் [போனார்கள் கடிதாய்.]
எத்திசையும் பார்த்து இருத்தமானை நோக்கி
இளைத்துமே திரிந்தார், இந்தவகை யாலே;
தொண்ணுாறுடன் ஒண்னு.
தொந்தமாகும் காட்டில் தொடரும்மழை யாலே
தோணும்வெயி லாலே தூக்கமும் மயக்கமும்;
தாகவிடா யாலே தருமரும் தளர்ந்து
தண்ணிர் கொண்டுவரத் தம்பியரை ஏவத்
தக்கதோர் வனத்தில் [தடாகமொன்றைப் பார்த்துப்]
பூத்திடுந் தடாகம் பொருந்துபுனல் அள்ளி