உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

விராட பர்வ ஏற்றப் பாட்டு

ருந்தும்சகா தேவன் அப்பாலே மயங்கி
மெய்யுடன் விழுந்தான் [மேனியெல்லாம் சோர்]
அத்திநிக ராக ஆர்க்குவீம சேனன்
அன்புடைய நால்வர் அள்ளுபுனல் அள்ளி
அருந்துகையி லப்போ ஒருபுதியால் நூறு.

பிள்ளையாரே வாரீர், பெருமாளே வாரீர்;
பெரியவனம் தன்னில் பேதமாய் இருக்க
ஆதியாம் தருமர் அம்மொழி அறிந்து
அடவியில் புகுந்து அரியபொய்கை நீரை
அன்புடன் எடுக்க அந்தகன் மறுக்க
அருவுருவம் காட்டிக் குருமொழி உணர்ந்தார்,
கொண்டுதம்பி மாரை; அண்டரும் மகிழ்ந்தார்;
அனைவரும் எழுந்தார் [ஆனந்தமாக.]
இக்கதை இருக்க; முக்கிய விராடன்
அக்கதையைச் சொல்வேன்; அறிந்திடுங்கள் தோழர்
ஒருபதியால் ஒண்ணு. ஓங்குபுக ழாளர்
பாங்குகுரு நாடர் பாண்டவர்கள் ஐவர்
ஆண்டபுவி எல்லாம் தாண்டியேசூ தாடித்
தரணியெல்லாம் தோற்றுத் திரியோதன ராஜன்
சொன்னபிர காரம் பன்னிரண்டு வருஷம்
பாரவன வாசம் திரமுடன் செய்தார்;
இருபதியால் ஒண்னணு. இவர்ஐவர் தாமும்
முறைமுறையா வேஷம் மறையவர் மடையன்
மானமில்லாப் பேடி வாசித்துறை யாளன்
காலிதனை மேய்ப் போன் காரிழை பணிப்பெண்
நேரிழையா ளாக விராடபுரம் சேர்ந்தார்.
முப்பதியால் ஒண்ணு. முன்னவனைக் கண்டு
மன்னவன் பணிந்தான்; மறையவரே வாரும்;
வருடமிங்கே வாழும், வரிசையுடன் என்றான்;
நகுலசகா தேவர் நலமுள்ளபாஞ் சாலி
அனைவரு மிருக்க, நாற்பதியால் ஒண்ணு.