உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விராட பர்வ ஏற்றப் பாட்டு

23

நாள்பல கடந்து தோள்பலத்த வீமன்
மடையனை அழைத்து மல்லுக்கட்டச் சொன்னார்;
இப்படி இருக்க, அப்புற மிருந்து
ஆனதொரு மல்லன் வென்றபல சாவி,
எனக்கெதிரி உண்டோ? என்றுபலம் பேசக்
கெங்கபட்டர் அப்போ மடையனை அழைத்து
மல்லுச்செய்யச் சொன்னார்; [மடையன்சம் மதிச்சான்.]
வந்தமல்ல னோடே சுந்தரமுனி சொல்ல
அம்பதியால் ஒண்ணு. அவனும்இவன் மேலே
ஆர்த்துவங் தெதிர்த்தான் [ஆரவாரம் செய்தான்.]
தோளோடேதோள் கொட்டித் துஷ்டர்களை அறிந்து
முடியில்முடி முட்டி மூர்க்கமாய் இடித்து
முகத்தினில் அறைந்து நகைத்துவிழ மோதி
துவைத்துவிட்டான் அப்போ [தருமரும் மகிழ்ந்தார்.]
அறுபதியால் ஒண்ணு. அரசனும் மகிழ்ந்து
மடையனை அழைத்து மார்புறத் தழுவி
ஆரம் பதக்கம் ஆடைமுதல் எல்லாம்
வேணதும் கொடுத்தார்; வீமனும் மகிழ்ந்தான்
தாம்உறையும் நாளில் கீசகனும் வந்தான்;
ஒருபதியால் ஒண்ணு.
ஏந்திழையைக் கண்டு அன்புடனே அப்போ
மோகம்மிகக் கொண்டான்; தோகையும் பயந்து
சுதக்கணக்குச் சொன்னாள்; அதற்குப்பின் அவனும்
அனங்கன்சரத் தாலே மனம்கசிந்து நொந்து
வண்ணமகள் தன்னைக் கண்ணியே தொடர்ந்தான்;
எண்பதியால் ஒண்ணு. ஏங்கிமனம் நொந்து
மாங்குயிலைப் போல மன்னன்சபை முன்னே
மண்மிசை விழுந்தான் [மற்றவர்கள் கலங்க];
அந்தக்கொடும் பாவி சந்தமட மானைக்
கைப்பிடிக்க என்று வெய்யநினை வானான்.
சூரிய பகவான் தூதனை அனுப்பிப்
பாதகத்தைத் தள்ளிப் பட்சம்வைத்துக் காத்தான்.
தொண்ணூறுடன் ஒண்ணு.