உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

விராட பர்வ ஏற்றப் பாட்டு



நேராக மடக்கி ராத்திரியில் சாடப்
போர்த்திறம் புரிந்து பூமியில் புரட்டிக்
குத்திவிழ மோதித் தத்தித்தலே சாய
மோதினான் மடையன் [முழுப்பலத் தோடே.]
கீசகன் துடித்துக் கிலேசமுற்று மாண்டான்;
பாதகன் மடியப் பாஞ்சாலியும் கண்டு
தீர்ந்தேன்பயம் என்றாள்; [தைரியமும் கொண்டாள்]
பிள்ளையாரே வாரீர், பின்னும்தம்பி மார்கள்
சொன்னபடி செய்தார்; [சோகமும் விடுத்தார்.]
கீசகன் மடியக் கேட்டகுரு நாடர்
வாட்டம்இல்லா மாடு ஒட்டிவாடா என்று
மச்சவள காட்டை அச்சமில்லாக் காட்டில்
ஆனிரையை ஒட்டி (அடித்துவரச்சொன்னார்.)
ஒருபதியால் ஒண்ணு. ஓங்குபுகழ்க் கன்னன்
துரியனுக்குச் சொன்னான், [துரிசுடனே செய்ய;]
விராடனுடை மாட்டை ஒட்டிவரச் சொன்னான்;
அந்தமாக வந்தால் ஐவரங்கு இல்லை;
இந்தப்படி செய்வாய் துரியோதனா, என்றான்;
அப்படியே செய்வோம்; அவசரம் வேண்டாம்;
இருபதியால் ஒண்ணு. ஏகவெள்ளம் போல
ஆனிரையை விட்டால்; மாடுபிடி சண்டை
போடவே பொருந்தப் பூபதி விராடன்
புத்திரரும் கூடி ஆனைபரி தேர்கள்
சேனையொடு கூடத் தெற்குத்திசை வந்து
திரிகர்த்தனைச் சாடித் [திக்குமுக் காட]
முறியஅடித் தாரே, முப்பதியால் ஒண்ணு.

விராதனைப் புடிச்சு விந்தைத்தேரில் கட்டித்
தகைத்துக்கொண்டான் வீமன் தருமருரை யாமே;
தாக்கியேமல் லாடி வீக்கிய விராடன்
நோக்குமகி ழாக [நொக்கியே அடித்து]
வந்தவனை ஓட்டி மன்னவனை மீட்டான்;
நாற்பதியால் ஒண்ணு. நால்வர்களும் வந்து