அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு
31
நான்பினத்த வில்லை; நீஅதட்டிச் சொன்னாய்;
சந்திர சூரியர்கள் தெற்குவடக் கானாலும்
சத்தியம் தவறான் என்னுடைய சீஷன்;
இருவர்முனி வோரும் வாக்குவாதம் செய்தார்.
ஐம்பதியால் ஒண்ணு.
அருந்தவ முனிவர் நாரதரும் வந்தார்;
ஒருவருக் கொருவர் உயுத்தம் வேண்டாம்;
நீங்கள் – இருவரும் சபதம் இன்னதென்று சொல்வீர்;
சத்யஅரிச் சந்திரன் பொய்என்ற வசனம்
நாப்புரண் டுரைத்தால்—இந்த – ரிஷிதபசை விட்டு
நான், நீசகுல மாவேன்; (நிந்தைக்கிட மாவேன்.)
அறுபதியால் ஒண்ணு.
அரிச்சந்திர ராஜன் – ஒரு பொய் சொல்லாமல் போனால்
என்தபசில்—பாதி நான்—இனைத்து விட்டால் தாறேன்;
இவர்களிட்ட தோர்சபதம் இந்திரனும் கேட்டு
தெய்வலோகம் போனார், சேதியறிந் தாரே.
வசிஷ்டாமா முனியும் தபசுக்கு நடந்தார்;
எழுபதியால் ஒண்ணு.
ஏங்கிவிச்வா மித்ரன் தெய்வத்தைத் தொழுதான்;
மன்னன் அரிச் சந்திரன் சொர்ணதானம் செய்ய
ஜயகண்டி போட்டான்; தபசி போல முனிவன்
அரச னண்டை வந்தான். என்பதியால் ஒண்ணு.
ஏன்ஐயா, முனியே உன் பாதமே சரணம்;
பட்சம்வைத் தருள்வீர்; சத்யஅரிச் சந்திரா,
நான், வேள்விசெய்யப் போறேன், நீ, கோடிபொன்
தருவாய்.
திரவியங்கள் தந்தேன்; எடுத்துக்கொண்டு போங்கள்;
உன்வசத்தில் தானே ஒருபொழு திருந்தால்
நாளைவந்து நானும் எடுத்துக்கொண்டு போறேன்.
தொண்ணுாறுயால் ஒண்ணு.