உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு

நான்—என்னமாய் இருப்பேன்?—நீ—செடியில்
          நுழை யாமல்
கடுகிவரு வாயே; காட்டிலவர் ஓடிக்
காரெலை பிரண்டை காய்கறி இலைகள்
நேராகப் பறிச்சார்; லோகிதனைக் காணோம்.
இருபதியால் ஒண்ணு.—அவன்—எங்கேஎன்று தேடி
வழியில், கண்டவரைக்கேட்டார்; (கண்டவர் சொன்னார்.)
தெர்ப்பையும் பறிச்சான்; தீண்டித்தே அரவம்.
நல்லதென்று சொல்லி நடந்தோடி வந்து
சந்திர மதிக்கு வந்துசேதி சொன்னார்;
முப்பதியால் ஒண்ணு. முனிவன்விசுவா மித்திரன்
சதியென்றறி யேனே;—இதற்—கென்னசெய்வே னென்று
அவள், ஏங்கியே புலம்பி மறையவனைக் கேட்டாள்;
நீ, வீட்டுவேலை செய்து பார்த்துவாடி என்றான்.
அவள், அப்படியே செய்து அழுதவள் புலம்பப்
போஎன்றவர் சொன்னார்; நாற்பதியால் ஒண்ணு.
நடந்தாளே புலம்பி, நாடுவிட்டுக் காடு;
வனத்தில்கண்ட பேரை வழிகேட்டுப் போனாள்;
அருமைமக னான லோகிதனைக் கண்டாள்;
உணவுஉண்ணச் சொல்லிச் சந்தியும் புலம்ப
ஐம்பதியால் ஒண்ணு. அப்பனே, மகனே,
ஆருயிர்ப் புதல்வா, என்மகனே, வாடா;
எழுந்திரடா என்று ஏந்துகொங்கை மேலே
தாங்கிஅணைச் சாளே; தகப்பனைப் பிரிஞ்சாய்;
வனத்திலே இறந்தாய்; அறுபதியால் ஒண்ணு.
ஆரோவேறு புள்ளை வேறேஎனக் குண்டோ?
பஞ்சணை மெத்தைமேல் படுக்கென்றால் படுக்காய்;
கொஞ்சித்தழை மேலே கூசாமல் படுத்தாய்;
கவுசிக முனியால் வீடுநா டிழந்தோம்.
எழுபதியால் ஒண்ணு.
என்னைப்பணிந் தோரை நான்பணிய லாச்சே!
மறையவர்க் கடிமை; மகனே, விலைப் பட்டோம்;
காட்டிலே அரவம் கடிச்சுதே மகனே,